• Post category:SRILANKA
  • Post published:January 5, 2021
Spread the love

ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்குத் தயாராகவிருக்கும், உறுப்பினர் விஜே தணிகாசலம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக் கல்வி தொடர்பான சட்ட வரைவு பற்றி, இலங்கைப் பாராளுமன்றத்தில் நியமன பா.உ. சுரேன் ராகவன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் அருவருப்பையும் ஏற்படுத்திவருவதாகக் கூறப்படும் இப் பேச்சு பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

இவ்வுரை குறித்து பா.உ. மனோ கணேசன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும்போது “இவ்வரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல முந்திய அரசாங்கத்தினால் அதற்காக உருவாக்கப்பட்டிருந்த அமைச்சையும் நீக்கிவிட்டது. அப்படியிருக்க ஒன்ராறியோ பாராளுமன்ற சட்ட வரைவு எந்த வகையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும்” எனக் கேள்வி எழுப்பினார்.

வடமாகாண முன்னாள் ஆளுனராகச் செயலாற்றிய சுரேன் ராகவன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் நியமனம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராவார்.

Print Friendly, PDF & Email