ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ லோகன் கணபதியின் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் வாழ்த்துச் செய்தி

 உங்கள்  அனைவருக்கும் இனிய தைப்பொங்கல், மரபுத்திங்கள் நல்வாழ்த்துக்கள்!

தை மாதம் என்பது தொன்மைக் காலம் தொட்டு, குறிப்பாக சங்ககாலம் தொடக்கம் தமிழர்களின் பல சிறப்பு கொண்டாட்டங்கள் அடங்கிய முக்கிய மாதமாக கருதப்படுகிறது .

ஜனவரி மாதத்தை மார்க்கம் மாநகரசபையின் தமிழர் மரபுத் திங்களாக 2012 ல் நாம் பிரகடனப் படுத்திய பின், 2014 ல் ஒண்டாரியோ மாகாண அரசும், 2016 ல் கனடிய மத்திய அரசும் ஜனவரியை தமிழர் மரபு திங்கள் ஆக பிரகடனப் படுத்தினார்கள்.

மூன்று இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் கனடா தேசத்தில் தமிழுக்கும் கலை பண்பாடுகளுக்கும் பல சிறப்பு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளமை தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டிய விடயமாகும்.

கனடாவில் பல வீதிகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது. குறிப்பாக வன்னி வீதி, திருகோணமலை வீதி, யாழ் சீடாவூட் கிரிக்கெட் மைதானம் போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தோடு கனடாவிலுள்ள பாடசாலைகள் தொடக்கம் பல்கலைக்கழகங்கள் வரை தமிழ் மொழியை ஓர் பாடமாக கற்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை (Tamil Chair) அமைக்க பட்டிருக்கிறது.

சிறந்த நடன பள்ளிகளில், சிறந்த நடன ஆசியிரியர்களும், பல இசை வாத்திய கருவிகளின் பயிற்றுவிப்பும், கல்லுரிகளும் இங்கு சிறப்பாக உள்ளன.

இவற்றுக்கும் மேலாக, அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் வளாகமும் இங்கு இயங்குவதுடன் சிறந்த பல பேராசிரியர்களும் இங்கு  கற்பிக்கிறார்கள்,

கனடாவைத் தொடர்ந்து அகிலமெல்லாம்  பரந்து வாழ்கின்ற தமிழர்கள் தை மாதத்தைத் தமிழர்களின் கலை,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை, வாழ்வியலை பறைசாற்றும் மரபு திங்களாக கொண்டாடத் தொடங்கி விட்டார்கள் என்பது தமிழர்களாகிய நாம் எல்லோரும் பெருமைப் படவேண்டிய நல்லதோர் விடயமாகும்.

குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் பிரித்தானியாவில் லண்டன் மாநகரசபை இந்த வருடம் முதல் ஜனவரி  மாதத்தை தமிழர்களின் மரபு திங்கள் மாதமாகப் பிரகடனப் படுத்தி கொண்டாடுவது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.

தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் எமது மொழி கலை ,கலாச்சார விழுமியங்களையும், வாழ்வியல் மரபுகளையும் ஒற்றுமையுடன் பேணிப் பாதுகாத்து தமிழ் இளையோர் மத்தியில் வளர்த்து செல்லுவோம் என்ற உறுதியுடன்,

இன்றய பெரும் தொற்றின் இருள் அகன்று எல்லோரும் நலமும் வளமும் பெருகி மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமென வாழ்த்தி விடை பெறுகிறேன் .

நன்றி வணக்கம் 

லோகன் கணபதி

பாராளுமன்ற உறுப்பினர்

ஒன்ராறியோ பாராளுமன்றம்.