ஒன்ராறியோ பாடசாலை வாரியங்களுக்கு 60,000 முகக்கவசங்கள் அன்பளிப்பு

ஒன்ராறியோ பாடசாலை வாரியங்களுக்கு 60,000 முகக்கவசங்கள் அன்பளிப்பு

Spread the love


Kuo Hua Trading Company Ltd. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Lisa Chunk அவர்களினால் 60,000 முக கவசங்கள் ஒன்ராறியோவிலுள்ள பாடசாலை வாரியங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஒன்ராறியோ பாடசாலை வாரியங்களுக்கு 60,000 முகக்கவசங்கள் அன்பளிப்பு 1
லோகன் கணபதி

மார்க்கம்-தோர்ண்ஹில் தொகுதியில் அக்டோபர் 6, 2020 அன்று நடைபெற்ற நிகழ்வின்போது ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி, மாகாண
கல்வி அமைச்சர் Stephen Lecce மற்றும் டொண்டோவின் தாய்பே( Taipei) பொருளாதார மற்றும் கலாச்சார அலுவலகத்தின் இயக்குநர் நாயகம் Y.M.Hsu
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மார்க்கம் தொர்ன்ஹில் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் “இந்த இக்கட்டான நேரத்தில் லிசா சங் அவர்களினால் வழங்கப்படுகின்ற நன்கொடை மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று மாத்திரமின்றி (Covid 19) பெரும்தோற்றுக்கு எதிரான எமது போராடத்தில் லிசா சங்கிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த தாராள நன்கொடையானது நாம் ஒன்றிணைந்து ஒரு சமூகமாக செயற்பட வேண்டும் என்பதற்கு நல்லதோர் உதாரணம் எனவும், இவ்வாறான நபர்கள் எமது சமூகத்தில் இருபது பெருமைக்குரிய விடயம்” எனவும் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email