அறிவித்தல்கள்

ஒன்ராறியோ: நேரடி ஒளிபரப்பில் மசோதா 104 மீதான மேல்முறையீட்டு வழக்கு

ஒன்ராறியோ மாகாண அரசினால் நிறைவேற்றப்பட்ட தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம் தொடர்பான மசோதா 104 மீது தொடரப்பட்ட மேன்முறையீட்டு வழக்கு டிசம்பர் 4, 2023 (திங்கள்) அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. காலை 10 மணி முதல் பி.ப. 4:00 மணி வரை நடைபெறவிருக்கும் இவ்விசாரணை zoom நேரலை வழியாக ஒளிபரப்பாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாகாண அரசினால் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் மீது அதன் எதிர்ப்பாளர்களால் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட மேன்முறையீட்டை அந்நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில் தற்போது அதற்கடுத்த நிலையிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது.

இவ்விசாரணையின் போதான நேரலை ஒளிபரப்பைப் பார்க்க விரும்புபவர்கள் zoom தளத்தில் பின்வரும் விடயங்களைப் பதிவுசெய்வதன் மூலம் ஒளிபரப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

Meeting ID: 652 3321 0747

Passcode: 021210

இந்நேரலை ஒளிபரப்பை நீங்கள் பார்த்து, கேட்டு அறிந்துகொள்ளமுடியுமே தவிர அதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ பதிவு செய்யவோ அல்லது காட்சிகளைப் படமாக்கவோ அவற்றைப் பிரசுரிக்கவோ, ஒலி/ஒளிபரப்பவோ, வேறெந்த வழிகளிலும் மீளுருவாக்கவோ அல்லது இப்பதிவுகளை வியாக்கியானப் படுத்தவோ சட்டம் இடம் தராது என்பதை மனதில் கொள்ளவேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பயிற்சிக் கட்டளை அறிவுறுத்துகிறது. இக்கட்டளையை மீறுபவர்கள் நீதிமன்றங்கள் சட்டம் R.S.O. 1990, c.C.43, பிரிவு 136 இன் பிரகாரம் குற்றவாளிகளாகக் காணப்பட்டு $25,000 டொலர்களுக்குட்பட்ட அபராதத்தையோ அல்லது ஆறு மாதங்களுக்குட்பட்ட சிறைத் தண்டனையையோ அல்லது இரண்டையுமோ எதிர்கொள்ளவேண்டி ஏற்படுமென இத்தால் எச்சரிக்கப்படுகிறது.

இச்சட்ட மசோதாவை நிலைநாட்டும் பொருட்டு நீதிமன்றத்தில் வாதி சார்பாக வாதிடுவதற்கு Goldblatt Partners சட்ட நிறுவனத்தை, தமிழ் மக்கள் சார்பாக, கனடிய தமிழர் தேசீய அவை (NCCT), கனடிய தமிழ் இளையோர் கூட்டணி (CTYA) மற்றும் கனடிய தமிழ் கலைக்கூடம் (CTA) ஆகிய அமைப்புக்கள் கூட்டாக நியமித்துள்ளன.

மசோதா 104 ஐ முடக்கிவிடுவதற்கு எடுக்கப்படுவரும் தொடர் முயற்சிகள் தமிழினப் படுகொலையினாற் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை அடக்குவதற்கு இனப்படுகொலை மறுப்பாளர்கள் அயராது செயற்பட்டு வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

எனவே, தமிழினப் படுகொலை மறுப்பினையும், திரிபுபடுத்தலையும் தடுத்து நிறுத்துவதற்காக தமிழ் மக்கள் ஒன்றிணைந்த சமூகமாக தொடர் ஈடுபாட்டையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் இம்முயற்சிகளுக்கு அதியுச்ச வலுவை அளிக்கவேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி!

கனடிய தமிழர் தேசீய அவை

கனடிய தமிழர் இளையோர் கூட்டணி

கனடிய தமிழ் கலைக்கூடம்ஆங்கிலத்தில்:

Hearing of the Appeal of Bill 104: Tamil Genocide Education Week Act

The Tamil Genocide deniers have appealed the decision of the Ontario Superior Court of Justice that upheld Bill 104, Tamil Genocide Education Week Act. The hearing for this appeal will be taking place at the Court of Appeal for Ontario on Monday, December 4th, 2023 between 10:00 am – 4:00 pm

The hearing can be watched live virtually via Zoom. Please see Zoom details below:

Meeting ID: 652 3321 0747

Passcode: 021210

For anyone watching the hearing live on December 4th, please ensure that it should not be recorded/photographed/screenshotted in accordance with the Court of Appeal of Ontario’s practice direction. 

Unless permission is given by the court, it is an offence under s. 136 of the Courts of Justice Act, R.S.O. 1990, c. C.43, punishable by a fine of not more than $25,000 or imprisonment of up to six months, or both, to record any part of the hearing, including by way of screenshot/capture and photograph, as well as to publish, broadcast, reproduce or disseminate any such recording.

To legally defend Bill 104, the National Council of Canadian Tamils (NCCT), Canadian Tamil Youth Alliance (CTYA) and Canadian Tamil Academy (CTA) have once again retained Goldblatt Partners law firm on behalf of the Tamil people to participate in this case as interveners. 

The deliberate and continuous attempts to target Bill 104 clearly suggests, that the Tamil Genocide deniers are actively working to silence the victims of the Tamil Genocide. 

Hence, as Tamil people, it is extremely integral that we maximize our efforts collectively to continue to stay engaged and provide ongoing support efforts to combat Tamil Genocide denial and distortion. 

Let’s stand together and collectively combat Tamil Genocide denial and distortion!

Thank you for your support.

National Council of Canadian Tamils

Canadian Tamil Youth Alliance

Canadian Tamil Academy