ஒன்ராறியோ கோவிட் நிலவரம் | இன்றைய தொற்றாளர் எண்ணிக்கை 4,456!

நோய்த் தொற்றுத் தொடங்கிய நாளிலிருந்து இதுவே அதிகமானது

இன்று (ஞாயிறு) ஒன்ராறியோ மாகாணத்தின் நோய்த்தொற்றாளர் எண்ணிக்கை, இதுவரை, 4,456 என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு மாகானத்தின் மொத்த தொற்றாளர் தொகை 386,608 ஆகிறது.

கோவிட் பெருந்தொற்று ஆரம்பமாகிய நாளிலிருந்து இதுவே அதிகமான தொகையாகும்.

இதில் 1,353 பேர் ரொறோண்டோவிலும், 860 பேர் பீல் பிராந்தியத்திலும், 444 பேர் யோர்க் பிராந்தியத்திலும், 377 பேர் ஒட்டாவாவிலும், 329 பேர் டர்ஹாம் பிராந்தியத்திலும் உள்ளார்களென மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டீன் எலியட் அறிவித்துள்ளார்.

இவர்களில் 21 பேர் நோயினால் மரணமடைந்துள்ளார்கள். இதுவரை மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,552. 346,239 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதுவரை 13,148,359 பேருக்கு PCR பரிசோதநைகள் செய்யப்பட்டுள்ளதெனவும் அவர்களில் 31,836 பேர்களது முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிகிறது.

மொத்தம் 3,139,743 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதெனவும் இவர்களில் 333,150 பேருக்கு இரண்டாவது ஊசியும் போடப்பட்டுவிட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது.