ஒன்ராறியோ அணு உலை அபாய அறிவிப்பு தவறுதலாக அனுப்பப்பட்டது! -

ஒன்ராறியோ அணு உலை அபாய அறிவிப்பு தவறுதலாக அனுப்பப்பட்டது!

Spread the love

ஜனவரி 12, 2020

இன்று காலை 7:20 மணிக்கு, ஒன்ராறியோ வாசிகளின் கைத்தொலைபேசிகளுக்கு அவசர அறிவிப்பு (emergency alert) ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், பிக்கெறிங்கிலுள்ள அணு உலை மின்பிறப்பாக்கி நிலையத்தில் (Pickering Nuclear Generating Station) “ஒரு சம்பவம்” நடைபெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அச் “சம்பவம்” பற்றிய அறிவிப்பு தவறாக அனுப்பப்பட்டுவிட்டது எனவும் மக்களுக்கோ அல்லது சூழலுக்கோ எதுவித ஆபத்துமில்லை என, அந் நிலையத்துக்குப் பொறுப்பான ஒன்ராறியோ பவர் கெனெறேசன் என்ற நிறுவனம் மீண்டும் ஒரு அவசர அறிவிப்பை அனுப்பியுள்ளது.

என்ன தவறு என்பது பற்றி விளக்கப்படவில்லை.

அணு மின் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு அன்னுப்பப்பட்டதெனக் கூறப்பட்டது.

அணுசக்தியைப் பாவித்து மின்சார உற்பத்தி செய்யப்படும் ஒன்ராறியோவின் அதி பெரிய நிலையம் இதுவாகும். விபத்துகள் அணு சக்திக் கசிவாகச் சிறிய அளவில் அல்லது கட்டுப்பாடுகளை இழந்து வெடித்துச் சிதறுவதும் (யப்பான் ஃபுக்குசீமா) உண்டு.

இங்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை எனவும் ‘தற்போதைக்கு மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளத் தேவையில்லை” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் பிக்கெறிங்கில் மொண்ட்கோமெறி பார்க் வீதியில், புறொக் வீதிக்கு மேற்கே, ஒன்ராறியோ ஏரிக்கு அருகில் இன் நிலையம் அமைந்துள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ஈரானுக்கு எதிராக ட்றம்ப் நடவடிக்கை எடுக்க முடியாது - பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *