ஒன்ராறியோவில் தீவு விற்பனைக்கு – $250,000 மட்டுமே!


ஒன்ராறியோவில் பிரத்தியேக தீவு ஒன்று விற்பனைக்கு வந்திருக்கிறது. விலை? $250,000 மட்டுமே (இதில் எழுத்துப்பிழை ஏதுமில்லை!!)

ரொறோண்டோவில் வீடொன்றின் சராசரி விலையின் கால் மடங்கு விலையுள்ள இத் தீவுக்கு, ரொறோண்டோவிலிருந்து வாகனம் மூலம் செல்ல இரண்டரை மணிநேரம் எடுக்கும்.

ரொறோண்டோவிலிருந்து 401 பெருந்தெரு மூலமாக கிழக்கு நோக்கிப் போகும்போது கிங்ஸ்டன் நகருக்கு முன்பதாக அமந்துள்ள அழகான குயின்ரி வளைகுடாவில் இருக்கும் பிறின்ஸ் எட்வேட் கவுண்டியில் இருக்கிறது இந்தத் தீவு. ஃபேர்மான்ஸ் தீவு அல்லது பசுத் தீவு என அழைக்கப்படும் இத் தீவு வேட்டையாடுபவர்களுக்கும், தூண்டில் மற்றும் படகோட்டப் பொழுதுபோக்காளர்களுக்கும் பயன்தர வல்லது.

உங்கள் கற்பனையை நீட்டுவதற்கு முதல் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். இத் தீவு சூழலியற் பாதுகாப்பு வலயத்தில் வருவதால் இதில் நிரந்தரமான கட்டிடங்கள் எதையும் அமைக்க முடியாது. தற்காலிக இறங்குதுறை போன்றவற்றை அமைக்கலாம்.

ஒன்ராறியோவில் முதலாவது ‘தீவிற்குச் சொந்தமான தமிழன்’ என்று பெயர்வாங்க விரும்புபவர்கள் முயற்சிக்கலாம்.