Spread the love

நவம்பர் 25, 2019

இலங்கையின் முன்னாள் அரசாங்கம் கையெழுத்திட்ட பல ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதெனப் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதில் முக்கியமாக 2015 இல் இலங்கையும் அமெரிக்காவும் இணைந்து முன்மொழிந்த தீர்மானம் 30/1 முற்றாக மறுபரிசீலனக்குள்ளாக்கபடுமெனப் புதிதாகப் பதவியேற்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளும், பொறுப்புக்கூறலும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமெனவும் இத் தீர்மானம் கூறுகிறது. இத் தீர்மானம் ஒரு ‘தேசியப் பார்வையில்’ அணுகப்பட்டு சம்நிலையைப் பேணுவதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் திருத்தம் செய்யப்படுமெனெ அமைச்சர் குணவர்த்தன கூறியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்க அரசுடன் செய்யப்பட்ட ‘அக்குயிசிசன் அண்ட் குறொஸ்-சேர்விசிங் அக்றீமெண்ட் (Acquisition and Cross Servicing Agreement (ACSA)), ‘ஸ்ரேற்றஸ் ஒஃப் ஃபோர்சஸ் அக்றீமெண்ட் (Status of Forces Agreement (SQFA)), ‘மில்லேனியம் சலென்ஞ் கோர்ப்பரேசன்’ (Millennium Challenge Corporation (MCC)) போன்ற சகல ஒப்பந்தங்களும் மீளாய்வுக்குள்ளாக்கப்பட்டு, தேவையெனின் திருத்தப்படும் எனவும் அத்துடன் இலங்கை இராணுவம் ஐ.நா.அமைதிப்படையில் பணிபுரிவதற்கு விதித்த தடைபற்றி ஐ.நா.வுடன் பேசி, அத் தடையை நீக்குவதற்கு முயற்சிக்கப்போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை முற்றிலும் அணிசாரா நிலைப்பாட்டுடன் இருக்கவேண்டுமென ஜனாதிபதி ராஜபக்ச தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

“இலங்கை மக்கள் செழிப்பாகவும், சமாதானத்துடனும் வாழ்வதற்கு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கமும், அபிவிருத்தியும் மிக முக்கியமானவை. அவற்றை அடைவதற்காகத் தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல புலம்பெயர்வாழ் இலங்கையர்களையும் அழைத்துப் பேசுவதற்குப் புதிய அரசு தயாராக இருக்கிறது. இதைச் சாதிப்பதற்கு சகல நாடுகளுடனும் நட்பையும், ஒத்துழைப்பையும் பேணவேண்டியிருக்கிறது. இக்காரணத்தால், இலங்கை அதிகார நாடுகளுடன் மட்டுமே உறவுகளை வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என பத்திரிகையாளர் மத்தியில் பேசும்போது அமைச்சர் குணவர்த்தனா தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  கொழும்பு | சனநெரிசலில் 3 பேர் மரணம் - மாளிகாவத்தை பள்ளிவாசல் தெருவில் சம்பவம்