Spread the love
# வெள்ளி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
# பிரித்தானியர்களை இத் தடை பாதிக்காது
# தடை 30 நாட்கள் வரை நடைமுறையிலிருக்கும்

Updated (March 12, 2020)

  • இன்று (வியாழன்), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப், 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அறிவித்த தடை தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொண் டெர் லெயென் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்ள்ஸ் மைக்கல் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
  • இத் தடை பற்றி ஜனாதிபதி ட்றம்ப் தம்முடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக முடிவை எடுத்துள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 11, 2020

வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு னுழைவு அனுமதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இன்று (புதன்) ஜனாதிபதி ட்றம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளி நள்ளிரவு முதல் இத் தடை நடைமுறைக்கு வருகிறது. இப் பயணத்தடை 30 நாட்கள் வரை நடைமுறையில் இருக்கும்.


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வதியும் அல்லது அங்கு தற்காலிகமாகத் தங்கியிருக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பலத்த பரிசோதனைகளின் பின்னர் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியர்களை இத் தடை பாதிக்காது. இத் தடை பயணிகளுக்கு மட்டுமேயல்லாது, அங்கிருந்து வரும் பண்டங்களுக்கு அல்ல என வெள்ளைமாளிகை அறிக்கை கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வந்தவர்களே அமெரிக்காவிற்கு கோவிட்-19 வைரஸ் தொற்றைக் கொண்டுவந்தார்கள் என அமெரிக்க ஜனாதிபதி தனது தொலைக்காட்சிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். “சீனாவிலிருந்து அமெரிக்காவிற்குள் பயணிகள் வருவதைத் தடைசெய்ததன் மூலம் நாம் முக்கியமான உயிர்காக்கும் பணியைச் செய்திருக்கிறோம். இப்போது அதே நடைமுறையை ஐரோப்பிய பயணிகளிலும் பிரயோகிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 1000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றாளர்கள் இருப்பதாகவும், 38 பேர் நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக, இத்தாலி தற்போது அதிக வைரஸ் தொற்று நோயாளிகளையும், அதிக மரணங்களையும் கொண்ட நாடாக மாறியுள்ளது. அங்கு உறுதிப்படுத்தப்பட்ட 12,000 நோயாளிகள் இருக்கிறார்கள்.

நோய் பரவும் வீதமும், இறப்பு வீதமும் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டதுமல்லாது, உணவு, மருந்து விற்பனை செய்யும் கடைகளை விட அனைத்து அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களும் மூடப்பட்டுல்லன. வாடிக்கையாளகளுக்கிடையே ஒரு மீட்டர் தூரத்தை உறுத்திப்படுத்த முடியாத மக்கள் கூடும் இடங்களும் மூடப்படவேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் நோய்த்தொற்றாளர்கள் 2000த்துக்கும் உள்ளே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  காபுல் மருத்துவமனை மகப்பேற்றுப் பிரிவில் துப்பாக்கிச் சூடு