ஐராவதம் மஹாதேவன் மறைந்தார்!
புகழ் பெற்ற கல்வெட்டுக்கலை அறிஞர் ஐராவதம் மஹாதேவன் இன்று (திங்கள்) இயற்கை எய்தினார்.
சம காலத்தில் சங்க இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை மீளவும் ஏற்படுத்திய மாமனிதர் இவர். கரூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள புகளூரில் கிடைத்த தமிழ் பிராமியிலான கல்வெட்டுக்களை ஆராய்ந்து சங்க காலத்தில் சேர மன்னர்கள் மூன்று பரம்பரைகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர் என அவர் கருத்துக் கூறியிருந்தார். தமிழ் நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பற்றிய அவரது முழுமையானதும், முறையானதுமான ஆராய்ச்சி தேசிய, சர்வ தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ‘Indus Script – Texts, Concordance and Tables’ என்ற அவரது ஆய்வு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் மீதான புதிய ஆய்வுகளுக்கு வழிகோலியிருந்தது என முன்னாள் தமிழ்நாடு அகழ்வாராய்ச்சித் திணைக்களத்தின் தலைவர் (1966-1988) முனைவர் நாகஸ்வாமி கருத்துத் தெரிவித்தார்.
தமிழ் இலக்கிய ஆளுமையும் பேராசியருமான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மஹாதேவன் அவர்களது ‘Early Tamil Epigraphy’ என்ற நூல் பற்றிக் குறிப்பிடும்போது “தமிழ் கல்வெட்டியல் பற்றி பெறுமதியானதும் பொருள் விளக்கவல்லதுமான நூலெதுவும் இது வரையில் வெளியிடப்படவில்லை” என்றார்.
“சிந்துவெளி நாகரிகத்தின் தீர்க்கப்படாத புதிர்கள் பற்றி உலகமே வியக்க வைத்த மேதை ஐராவதம் மஹாதேவன்” என மேற்கு வங்க ஆளுனர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டினார்.
திரு.மஹாதேவன் அவர்களது இழப்பு தமிழுக்கும் உலகத் தமிழருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
நன்றி: ‘தி இந்து’
திரு.ஐராவதம் மஹாதேவன் அவர்களது நூல்கள்: