ஐந்து ஆண்டுகளில் புதிய யாழ்ப்பாணம்! | ரணில் விக்கிரமசிங்க -

ஐந்து ஆண்டுகளில் புதிய யாழ்ப்பாணம்! | ரணில் விக்கிரமசிங்க

2.35 பில்லியன் ரூபா செலவில் புதிய நகரசபை மண்டபம்!
பிரதமர் விக்கிரமசிங்க அடிக்கல் நாட்டினார்!
நகரபிதா இமானுவேல்ஆணோல்டின் கனவு நிறைவேறுகிறது!

செப்டம்பர் 07, 2019

2.35 பில்லியன் ரூபா செலவில் அமையவிருக்கும் புதிய யாழ் நகர மண்டபம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யும் உத்தேசத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார்.

இன்று காலை அவர் யாழ். புதிய பேருந்து நிலையைத்தைப் பார்வையிட்டதோடு, புதிய மாநகரசபை மண்டபத்துக்குரிய அடிக்கல்லையும் நாட்டினார். யாழ்ப்பாண மாநகரசபை மைதானத்தில் வைத்துப் பல திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் போதே அவர் இதைக் கூறினார். யாழ் நகரத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அது அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ் நகரை அபிவிருத்தி செய்யவேண்டுமென்பதத் தன் கனவாகக் கொண்டு உழைத்த நகரபிதா இம்மானுவேல் ஆணோல்ட் அவர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த மாபெரும் பரிசு இதுவெனக் கருதப்படுகிறது.

யாழ். கோட்டையில் இன்று நடைபெறவிருக்கும் ‘எண்டர்பிறைஸ் சிறீலங்கா’ கண்காட்சியையும் பிரதமர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

யாழ். மாநகரசபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பேசும்போது, “இக் கட்டிடம் யாழ்ப்பாண அபிவிரித்தித் திட்டத்தின் ஒரு படி தான் என்றும் போருக்குப் பின்னான யாழ் குடாநாட்டின் அபிவிருத்தியை நிறைவேற்றுவது தற்போதய அரசின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல், மீன்பிடித் துறை, சுற்றுலாத்துறை, விவசாயத்துறை ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல் போன்ற பல திட்டங்களைப் புதிய தொழில்நுட்பத்தைப் பாவித்து செயற்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய நகரங்கள் சிறீலங்காவினதும், தமிழ் மக்களினதும் அழிக்க முடியாத கலாச்சார அடையாளங்கள். அந்த மரபுகளின் வழியாகவே அபிவிருத்திகளையும் னாம் மேற்கொள்வோம். இதற்காகத் தனியாக ப் பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் இதற்குத் தேவை. அடுத்த 5 வருடங்களில் புதிய யாழ்ப்பாணம் உருவாகியேயாக வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபை மண்டபம், சுகித புரவார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பெரு நகர மற்றும் மேற்கத்தய அபிவிருத்தி அமைச்சினால் (Ministry of Megapolis and Western Development) 2.35 பில்லியன் ரூபா செலவில் கட்டப்படவிருக்கிறது எனவும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் பெருந்தொகையான மக்கள் நாட்டைவிட்டுப் போய்விட்டனர். இது மாற்றப்பட்டு இந்நாட்டில் சகல மக்களும் இசைவுபட வாழவேண்டுமெனவும், இத் திட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறினார்.

யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உ. திரு. எம்.ஏ. சுமந்திரன் பேசும்போது , யாழ் அபிவிருத்தித் திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படுகிறது என்றார். வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் பேசும்போது, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் போட்டியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சியான விடயமென்றும் அவரது வரவு ஜனநாயக மரபை மேலும் உறுதியாக்கும் எனவும் கூறினார்.

Related:  இந்தியாவுடன் நெருக்கமாகும் இலங்கை | கோதாபயவின் முதல் ராஜதந்திர வெற்றி?

உதவி கல்வி அமைச்சர் விஜய்கலா மகேஸ்வரன், த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிரஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். நகரபிதா இம்மானுவேல் ஆணோல்ட் மற்றும் பல அரசியல்வாதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் இவ் வைபவத்தில் கலந்துகொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)