• Post category:HEALTH
  • Post published:November 11, 2020
Spread the love

கோவிட் நோய்த் தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்த ஐந்து நோயாளிகளில் ஒருவராவது மனநோய்க்கு ஆளாகிறார்கள் என ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் மற்றும் NIHR ஒக்ஸ்ஃபோர்ட் உயிரியல் மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந் நோயாளிகள் தொற்றுக்குள்ளாகி மூன்று மாதங்களில் அவர்களுக்கு மனப்பதட்டம் (anxiety), மன அழுத்தம் (depression), தூக்கமின்மை (insomnia) ஆகிய மனநோய்கள் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே உளநோய்ப் பாதிப்பு இருந்தவர்களௌக்கு கோவிட் தொற்றினால் அது மீளவும் ஏற்படுதற்கான சந்தர்ப்பம் 65 வீதம் அதிகமுள்ளதெனவும் இவ்வாய்வு கூறுகின்றது.

மனநோய்க்கும் கோவிட்டுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என அறிவதற்கு மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டுமெனவும், இந் நோயாளிகளின் வாழ்வுமுறை, வறுமை, வாழிடம், போதை வஸ்து பாவனை போன்ற இதர காரணிகளை இவ்வாய்வின்போது கணக்கிலெடுக்கவில்லை என்பதனால் இவ் விடயம் பற்றி மேலதிக ஆய்வுகள் தேவை என ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியற் பேராசிரியர் போல் ஹரிசன் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email