ஐசிஸ் தலைவர் அல்-பாக்டாடி சிரியாவில் கொல்லப்பட்டார்?
அக்டோபர் 27, 2019
ஐசிஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல்-பாக்டாடி, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கையின்போது கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

அமெரிக்கப் படைகளின் நடவடிக்கையின்போது அல்-பாக்டாடி தன் மூன்று குழந்தைகளையும் சேர்த்து தற்கொலை அங்கியை வெடிக்க வைத்ததன் மூலம் தற்கொலை செய்துகொண்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அவருடைய தோழர்கள் பலரும் அவரோடு சேர்ந்து கொல்லப்பட்டார்களென வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையினபோது அமெரிக்கப் படையினர் எவரும் காயப்படவில்லை எனவும் பாக்டாடி கொல்லப்பட்ட விடயத்தை கட்டிடத்துள் இருந்து அமெரிக்க விசேட படைகள் பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.