EntertainmentIndia

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பாரத ரத்னா’ விருது – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்குக் கடிதம்


மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுத்துக் கெளரவிக்குமாறு, ஆந்திரப் பிரதேச முதல்வர் வை.எஸ். ஜகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய நலன்களுக்குக் குறிப்பிடக்கூடிய அளவு பங்களிப்பைச் செய்யும் இந்தியர்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் அதியுச்ச விருது இது. எஸ்.பி.பாலா இசைக்கும், கலைக்கும் வழங்கிய பங்கு அளப்பரியது.

“அவரது அளப்பரிய புகழ் மற்றும் உலகம் பூராவும் அவர் கோலோச்சிய 50 வருட இசைத் துறைக்கு அவர் விட்டுப் போகும் சாதனைகள் போன்றவற்றால், உலகின் சகல மூலைகளிலுமிருந்து அவருக்கு அஞ்சலிகள் வந்துகொண்டேயிருக்கின்றன” எந அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி. பாலாவுக்கு 2001இல் பத்மசிறீ விருதும், 2011 இல் பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டிருந்தன. இதைவிடதெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார்.சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் என்ற விருதை 6 தடவைகள் பெற்றுள்ளார். தெலுங்கு சினிமாவிற்கு மாத்திரம் அவர் செய்த பன்களிப்பினால், ஆந்திர அரசின் 25 நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.