Entertainment

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கோவிட்-19 நோய்த் தொற்று!


அபிமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கோவிட்-19 நோய் தொற்றியுள்ளதாகவும், சிகிச்சைக்காக இன்று (புதன்) காலை சென்னையிலுள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது சிகிச்சை நல்லபடியாக நடப்பதாகவும் விரைவில் குணமடைந்து இரண்டே நாட்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் எனவும் அவர் பதிவுசெய்த காணொளியொன்றை மருத்துவமனையிலிருந்தே அவர் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார்.

பல தேசிய விருதுகளைப் பெற்ற, 74 வயதுள்ள அவர், 16 மொழிகளில், 40,000 த்துக்க்ம் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

“கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நெஞ்சில் கொஞ்சம் சளி பிடித்திருந்தது. பின்ன தடிமனும், காய்ச்சலும் வந்தன. நான் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன். அப்போதுதான் எனக்கு மிகவும் சொற்பமான, மெதுவான கொறோணாவைரஸ் தொற்றியிருப்பது தெரிந்தது. நான் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலைச் செய்யலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். நான் அதை மறுத்துவிட்டேன். ஏநைய குடும்பத்தவர் இருக்குமிடத்தில் அது கஷ்டமாகவிருக்கும். அதனால் நான் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சைபெற முடிவு செய்தேன்” என அவர் தெரிவித்தார்.



“இங்கு எனது நண்பர்கள் இருக்கிறார்கள், என்னை நந்றாகப் பார்க்கிறார்கள். நான் சுகமாக இருக்கிறேன். ஒருவரும் கவலைப்படவேண்டாம்” என அவர் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊர் முடக்கத்தின்போது, கொறோணாவைரஸ் பற்றிய விழிப்புணர்வுப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடியுமிருந்தார் அவர்.