News & AnalysisSri Lanka

எவ்வளவோ அதிகாரங்களைக் கொண்டிருந்தும் அரசாங்கம் சொன்னது எதையுமே செய்யவில்லை – சிறிவிமல தேரர்

“இலங்கை மக்கள் முன்னணி கட்சி கேட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மக்கள் வழங்கியிருந்தார்கள், அப்படியிருந்தும் அரசாங்கம் வாக்குறுதியளித்ததுபோல எதையுமே செய்யவில்லை” எனக் கெப்பிட்டியாகொட கெட்டம்பே ராஜோபவனராம விஹாரமா அதிபர் சிறிவிமல தேரர், நேற்று (04) அவ்விஹாரைக்குச் சென்றிருந்த இ.ம.மு. கட்சித் தலைவர் ஜி.எல். பீரீஸிடம் தெரிவித்தார்.

அதிகாரத்தைக் கொடுத்தால் அதை வைத்து இவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். அதைப் புரிவதற்கு அவர்களால் இயலாமல் இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு விருப்பமில்லையா? அவர்களது விருப்பம் தங்களது பைகளை நிரப்பிக்கொள்வதே.

கெப்பிட்டியாகொட கெட்டம்பே ராஜோபவனராம விஹாரமா அதிபர் சிறிவிமல தேரர்

அங்கு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாமல், ஒவ்வொருவரிடம் இழுபறியிருக்கிறது. அவர்கள் கேட்ட அளவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. 19A யைச் சகிக்க முடியாதுள்ளது என்றார்கள், 20A கொடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமென்றார்கள், கொடுக்கப்பட்டது. வேறென்ன சொல்ல வேண்டும்? இன்னுமொரு தடவை அவர்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுக்க முடியாது.

அதிகாரத்தைக் கொடுத்தால் அதை வைத்து இவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். அதைப் புரிவதற்கு அவர்களால் இயலாமல் இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு விருப்பமில்லையா? அவர்களது விருப்பம் தங்களது பைகளை நிரப்பிக்கொள்வதே.

இது ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு குடும்பம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள். இப்போது அப்படியில்லை. ஒரு நாடு – பல சட்டங்கள். எல்லாம் செய்யப்படுமென வாக்குறுதியளித்தார்கள், ஆனால் எதுவுமே செய்யப்படவில்லை. மக்கள் எங்களையே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

காடழிப்பு பற்றி அரசாங்கத்திடம் கேட்டால் அப்படியொன்றும் நடைபெறவில்லை என்கிறார்கள். ஆனால் பாரிய காடழிப்புகள் நடைபெறுவதைத் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன.பொய் சொல்வது கூடாது. நாங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். நேர்மையாகச் செயற்படுவதற்காகவே அதிகாரம் வழங்கப்பட்டது” என தேரர் மேலும் தெரிவித்தார்.