எல்லாத் திருடர்களும் மோடியின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள் - ராஹுல் காந்தி -

எல்லாத் திருடர்களும் மோடியின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள் – ராஹுல் காந்தி

” எல்லாத் திருடர்களும் மோடி பெயரைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதன் மூலம் நான் எதையும் தவறாகச் சொல்லிவிடவில்லை” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஹுல் காந்தி சுராட் நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கும்போது கூறினார்.

Photo credit: India Today

கடந்த ஏப்ரல் 13 அன்று, கோலார், கர்நாடகாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசியபோது “நிராவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என ஏன் எல்லாத் திருடர்களும் மோடி என்ற பெயரைக் கொண்டிருக்கிறார்கள்? என்று பேசியது தொடர்பாக மோடி குடும்பப் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள் பதிவுசெய்திருந்த வழக்கு சுராட் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் வழக்கு டிசம்பர் 10ம் திகதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

குற்றவியல் மானபங்கப் பிரிவின் கீழ் பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர் புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி பி.எச்.கபாடியா கடந்த மே மாதம், இது தொடர்பாக ராஹுல் காந்தி நீதி மன்றத்தில் நேரடியாச் சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.

இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ராகுல் காந்தி, தான் சொன்னதில் தவறேதும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *