எலிசபெத் மகாராணியார் மரணம்

இங்கிலாந்தின் நீண்டகால முடிக்குரிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 95 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளாகி ஸ்கொட்லாந்திலுள்ள அவரது குடும்ப விடுமுறை வீடான பல்மோறல் கோட்டையில் ஓய்வெடுப்பதற்காகத் தங்கியிருந்ததாகவும் இன்று திடீரென அவரது உயிர் பிரிந்துவிட்டதெனவும் பக்கிங்காம் அரண்மனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எலிசபெத் மஹாராணி II 1954 இல் இலங்கை வந்தபோது

70 வருடங்களுக்கு முன்னர், பெப்ரவரி 6, 1956 இல் மகாராணியாகப் பட்டம்சூட்டப்பட்ட அவர் இந்த வருடம் தனது பிளாட்டினம் ஜூபிலீ கொண்டாட்டங்களில் கலந்துகொண்டிருந்தார். 1066 இல் நோர்மன் அரசரான முதலாம் வில்லியம் காலத்திலிருந்து இந்த அரச பரம்பரை இங்கிலாந்தை ஆட்சிபுரிந்து வருகிறது.

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்றஸ்ஸின் பதவியேற்பு வைபமே மஹாராணியார் கலந்துகொண்ட இறுதியான் பொது வைபவமாகும். இதனைத் தொடர்ந்து அவர் தடிமன் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் மருத்துவ உதஹ்விகளைப் பெற்றுக்கொண்டும் அவர் தனது வழமையான பணிகளை தொடர்ந்தும் செய்துவந்தார் எனப்படுகிறது. அவரது மூத்த புதல்வரான சார்ள்ஸ் இளவரசருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டாவது தடவையாக கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேர்ளிங் சுற்றுப் போட்டியில் பெண்கள் அணி தங்கப்பதக்கத்தையும், ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றமைக்காக அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியமையே அவரது இறுதியான பொதுக் கடமையாகும். “உங்களது உள்ளூர் ஆதரவாளர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் மக்களுடன் இணைந்து எங்களது நல்லாசிகளையும், வாழ்த்துக்களையும் உங்களுக்கும் இவ்வெற்றிக்காக உழைத்த உங்கள் பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பங்களுக்கும் தெரிவிக்கிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

மஹாராணியார் விரைவில் குணம்பெறவேண்டுமென்று பிரித்தானியாவின் முன்னாட் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ ஆகியோர் ருவிட்டர் செய்திகள் மூலம் ஆசிகளைத் தெரிவித்திருந்தனர்.

கடந்த அக்டோபர் முதல் மஹாராணியாரது உடல்நலம் சற்றுப் பலவீனமான நிலையிலேயே இருந்துவந்தது எனவும் மருத்துவர்களது பணிப்பின் பேரில் அவர் ஓய்வெடுத்து வந்தாலும் சில இலகுவான பணிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.

73 வருடங்களாகத் திருமணப்பந்தத்திலிருந்த அவரது கணவர் பிலிப் இளவரசர் கடந்த ஏப்ரல் மாதம் அவரது 99 ஆவது வயதில் காலமாகியிருந்தார்.

தற்போது ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோறல் விடுமுறை வாடி வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமெனவும் அதைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெறுமெனவும் அறியப்படுகிறது.