எரிக்கப்படும் அமசோன் மழைக் காடுகள் -

எரிக்கப்படும் அமசோன் மழைக் காடுகள்

பிரேஸில் நாட்டில் வரலாறு காணாத அளவு மழைக் காடுகள் இந்த வருடம் எரிக்கப்பட்டுள்ளன. 2018 இன் இதே காலப்பகுதியோடு ஒப்பிடும்போது இந்த வருடம் இது 84%த்தால் அதிகரித்திருக்கிறது என விண்ணாய்வுக்கான தேசிய நிறுவனம் (The National Institute for Space Research (Inpe)) தெரிவிக்கிறது.

காடழிப்பு சம்பந்தமான தரவுகள் விடயத்தில் உடன்பட மறுத்ததன் விளைவாக தரவுகளைத் தந்த நிறுவனத்தின் அதிபரைக் கடந்த வாரம் பிரேஸிலின் ஜனாதிபதி ஜயர் போல்சனாரோ பதவி நீக்கியிருந்தார் .

உலகின் அதி பெரிய கார்பன் அகற்றியாக அமேசோன் மழைக்காடுகள் தொழிற்படுகின்றன.

அத்தோடு, 1 மில்லியன் சுதேசிய மக்களும் , சுமார் 3 மில்லியன் தாவர, விலங்கு வகைகளும் வதியும் வாழிடம்.

சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஜனாதிபதி பொல்சொனாரோவைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். காடழிப்பவர்களையும், வணிக விவசாயிகளையும் அவர் ஊக்குவிப்பதனால்தான் அவை மிகவும் வேகமாக அழிக்கப்படுகின்றன. ஜனவரியில் அவர் பதவியேற்றத்திலிருந்து காடழிப்பின் துரிதம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள்.

Brazil Prez Bolsorano – Reuters

அருகிலுள்ள பராகுவே நாட்டில் இருந்து புறப்படும் புகையேதான், அமேசான் காடுகளிலிருந்தல்ல என்கிறார்கள் சில காலநிலை ஆய்வாளர்கள்.

இந்த வருடம் ஜனவரி – ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் 74,000 தீக்கொழுந்துகளைத் தாம் கண்டுள்ளதாக விண்ணாய்வுக்கான தேசிய நிறுவனம் கூறுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் மானியத்தைக் குறைத்துவிட்டதால் அவர்களே தன் மீதுள்ள ஆத்திரத்தில் காடுகளுக்குத் தி வைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் ஜனாதிபதி.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *