• Post category:SRILANKA
  • Post published:November 10, 2020
Spread the love

இலங்கையின் முன்னாள் விமானப்படைத் தளபதி சுமங்கள டயஸ் கனடாவுக்கான இலங்கைத் தூவராக நியமிக்கப்படுள்ளார். இத்துடன் மேலும் பல உயர் பதவி நியமனங்களை இன்று பாராளுமன்றக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இறுதிப் போரின்போது பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகள் cluster bombs) மற்றும் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை வீசியமைக்காக சுமங்கள டயஸ் தலைமையில் இயங்கிய இலங்கை விமானப்படை மீது பல மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. அத்தோடு, பாதுகாப்புக்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்தில் குழுமியிருந்த மக்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்ததன் மூலம் போர்க்குற்றங்களைப் புரிந்த 57,58,59 வது இராணுவ படைப்பிரிவுகளுக்கு விமானத் தாக்குதல்களை ஒருங்கிணைப்புச் செய்ததன் மூலம் இவரும் ஒரு போர்க்குற்றவாளியாகக் கருதப்படுகிறார் எனக்கூறிப் பல கனடிய, உலகத் தமிழர்கள் சுமங்கள டயஸின் நியமனத்துக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துவந்தனர்.

சுமங்கள டயஸின் நியமனத்துடன் மொத்தமாக ஏழு வெளிநாட்டு உயர்பதவி நியமனங்களை இன்று பாராளுமன்றக் குழு அறிவித்துள்ளது. அவர்கள்:

பெயர்தூதுவர் பதவிக்கான நாடுகள்
சுமங்கள டயஸ்கனடா
அஹமெட் ஜவாட்சவூதி அரேபியா
திருமதி அருணி ரணராஜாநெதர்லாந்து
தர்ஷனா பெரேராசுவீடன்
எ.கே.பத்மநாதன்எகிப்து
செல்வி எஸ்.டி.கே. சேமசிங்க போலந்து
திருமதி சமிந்தா கொலோன்தாய்லாந்து
Print Friendly, PDF & Email