எம்.கே.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் வீட்டில் வருமானவரித் திணைக்களம் சோதனை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற போதும் அரசியற் கட்சிகள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளில் குறைவேதுமெல்லை.
தி.மு.க. தலைவர் எம்.கே.ஸ்டாலினின் மகள் செந்தமரையின் கணவரான சபரீசனின் சென்னை சொத்துக்களை, வெள்ளியன்று (இன்று) வருமான வரித் திணைக்கள அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். தேஅன்ம்பேட்டையிலுள்ள சபரீசனின் அலுவலகங்களும், வேறு இரண்டு கட்டிடங்களும் அதிகாரிகளின் சோதனகளுக்குட்படுத்தப்பட்டன. நீலாங்கரையில் இருக்கும் அவரது வீடு சோதனைக்குட்படுத்தப்படவில்லை எனப்படுகிறது.
மாமனார் எம்.கே.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவரும் அவரது முதன்மை ஆலோசகருமான சபரீசன் பொதுவாக பின்னணியிலேயே இருக்க விரும்புபவர். கட்சியின் பிரதான திட்டமிடலுக்கு இவர் தான் பின்னணியிலிருப்பதாகப் பேசப்படுகிறது.
25 அதிகாரிகளுடன் வெள்ளியன்று ஆரம்பித்த சோதனை இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சோதனைகளின்போது சபரீசன் கோயம்புத்தூரிலிருந்ததாகவும் தற்போது சென்னை வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம், தி.மு.க.வின் இன்னுமொரு தலைவர் ஈ.வி.வேலுவின் திருவண்ணாமலையிலுள்ள பல சொத்துக்கள் வருமான வரித் திணைக்களத்தின் தேடுதலுக்குள்ளாகியிருந்தன. 110 அதிகாரிகள் இத் தேடுதலில் பங்குபற்றியிருந்தனர்.
ஏப்ரல் 6 ம் திகதி நடபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கும் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்குமிடையில் போட்டி நிலவுகிறது. தி.மு.க. கூட்டணி 170 இற்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுமெனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.