‘என் பெற்றோரின் கழுத்தை துண்டாடும்படி சுதேஷ் அம்மான் கூறினார்’ – காதலி

Spread the love

பெப்ரவரி 5, 2020

“கழுத்தை வெட்டி என் பெற்றோரைக் கொன்றுவிடும்படி சுதேஷ் அம்மான் என்னைத் தூண்டினார்’ என தெற்கு இலண்டனில் சிலநாட்களுக்கு முன்னர் காவற்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதியான சுதேஷ் அம்மானின் காதலி தெரிவித்ததாக காவற்துறை தெரிவித்திருக்கிறது.

20 வயதுடைய தெற்கு இலண்டன் வாசியான சுதேஷ் அம்மான் இஸ்லாமிய வன்முறையைப் போதிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமைக்காக ஏற்கெனவே சிறைவாசம் அனுபவித்துச் சமீபத்தில் விடுதலையானவர். சிலநாட்களின் முன் தெற்கு இலண்டனிலுள்ள ஸ்ட்றெதம் பகுதியில், அவர் பொதுமக்கள் சிலரைக் கத்தியால் குத்தியபோது காவற்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர். சிறையிலிருந்து விடுதலையான அவரைக் காவற்துறை பின்தொடர்ந்து கொண்டிருந்தமையால் இச் சம்பவத்தில் அவர்களல் உடனடியாகத் தலையிட முடிந்தது.

நவம்பர் மாத்ம் 2018 ஆம் ஆண்டு, இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்தமைக்காகவும், அவற்றிலுள்ள விடயங்களைப் பொதுமக்களுக்குப் போதித்தமைக்காகவும் கைது செய்யப்பட்ட அவருக்கு, குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்காக, 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.


அப்போது 17 வயது நிரம்பியிருந்த அவர் தாயுடனும், இளைய சகோதர சகோதரிகளுடனும் வாழ்ந்துவந்ததாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் அப்போதே ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் காவற்துறை தெரிவிக்கிறது. அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்த காவற்துறையினர் மே 2018 அளவில் அவரைக் கைதுசெய்திருந்தனர்.

அவரது கம்ப்யூட்டர், ஃபோன் ஆகியவற்றை ஆராய்ந்தபோது, அவற்றில் குண்டுகள் தயாரிப்பது தொடர்பான விடயங்களை அவர் தரவிறக்கியிருந்ததும், பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்தது. கத்தியைக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள், காதலி ஆகியோருடன் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தமை பற்றிய விடயங்களையும் காவற்துறை அறிந்திருந்தது.

டிசம்பர் 2017 இல் இஸ்லாமிய தேசத்தின் தலைவர் அபூபக்கர் அல்-பக்டாடியின் படத்தைத் தனது சமூக வலைத் தளத்தில் பிரசுரித்து “இஸ்லாமிய தேசம் எங்கும் போய்விடப் போவதில்லை” என அவரது சகோதரருக்குச் செய்தி அனுப்பியிருந்தார். அக்டோபர் 2019இல் அல் பக்டாடி அமெரிக்கப் படையினால் கொல்லப்பட்டிருந்தார்.

அத்தோடு, யாசிடி பெண்கள் அடிமைகள் எனவும் அவர்களை வன்புணர்வு செய்வதைக் குரான் அனுமதிக்கிறது எனவும், காதலிக்குச் செய்தியை அனுப்பிய அவர் அதில், காதலியின் பெற்றோரது கழுத்துக்களை வெட்டி அவர்களைக் கொலைசெய்யும்படியும் கேட்டிருந்தார் எனக் காவற்துறை தெரிவித்திருகிறது.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில், அல்-கயீதா சஞ்சிகை ஒன்றை அவர் தனது குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்தார் எனவும், அவரது அகோதரர் ஒருவர் அவரது கல்வி பற்றிக் கேட்டபோது ” படிப்பதைவிட நான் என்னை வெடித்துக் கொன்றுவிடுவேன்” எனக் கூறியிருந்ததாகவும் காவற்துறையினர் தெரிவ்த்துள்ளனர்.

இதே வேளை, சுதேஷ் அம்மானின் உறவினர்கள் இலங்கையில் வசிப்பதாக இன்னுமொரு ஊடகம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  கொறோனாவைரஸ் | இத்தாலியில் மரணங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன?

Leave a Reply

>/center>