'என்ரெபிறைஸ் சிறீலங்கா' - தொழிற்துறைப் பொருட்காட்சி -

‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ – தொழிற்துறைப் பொருட்காட்சி

3வது பொருட்காட்சி – செப்டம்பர் 7-10 வரை, யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது

செப்டம்பர் 01, 2019:

‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ எனப்படும் பொருட்காட்சி இலங்கைத் தீவு முழுவதும் தொழிற்துறைக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் அதேவேளை அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாடு முழுவதிலுமுள்ள மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்வதற்காகவும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். மூன்றாவது தடவையாக நடைபெறும் இப் பொருட்காட்சி இந்த வருடம் செப்டம்பர் 7 முதல் 10 வரை, யாழ்ப்பாணக் கோட்டையில், நடைபெறவிருக்கிறது.

யாழ்ப்பாணக் கோட்டை

வடமாகாணத்தின் தனித்துவமான தொழில்துறைகளில் இளைய தலைமுறையினரை ஆர்வப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் அத் தொழில்துறையை மேலும் பலப்படுத்துவதே இப் பொருட்காட்சியின் நோக்கம்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கே தனித்துவமான விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான கடன் வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்து இத் துறைகளை அபிவிருத்தி செய்வதையே இத் திட்டம் எதிர்பார்க்கிறது.

ஏழு வலயங்களைக் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும் இப் பொருட்காட்சி மண்டபத்தில் வடக்கின் எதிர்கால தொழில் வல்லுனர்கள் தங்களுக்குத் தேவையான அறிவு, அத்தியாவசியமான சேவைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வலயங்கள் முறையே, தொழில்துறை வலயம் (Enterprise Zone), அரச மற்றும் தனியார் துறை வலயம் (Government and Private Sector Zone), கல்வி வலயம் (Education Zone), பசுமை வலயம் (Green Zone), புதிய கண்டுபிடிப்புகளுக்கான வலயம் (Innovation Zone), வர்த்தக வலயம் (Commercial Zone), ஊடக வலயம் (Media Zone) எனப் பெயரிடப்பட்டிருக்கும். பொருட்காட்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இவ் வலயங்களில் இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தொழில் வல்லுனர்களாக வர விரும்பும் ஆர்வலர்களுக்கு அவர்களது எண்ணக்கருக்களை வடிவங்களாக்கி, கனவுகளை நனவுகளாக்குவதற்குத் தேவையான வழிகாட்டல்கள், தொழில்களைத் தொடங்குவதற்குத் தேவையான கடன்களைக் குறைந்த வட்டி வீதங்களில் பெறுதல் ஆகிய தகவல்களை தொழில்துறை வலயத்தில் பேற முடியும்.

நிதியமைச்சரின் கீழ் இயங்கும் ‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ வின் செயலகம் மற்றும் அரச வர்த்தக வங்கிகளின் அதிகாரிகள் ‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ திட்டத்தின் கீழ் செய்யப்படும் கடன் விண்ணப்பங்கள் போன்றவற்றை உடனேயே பூர்த்தி செய்வதற்கான உதவிகளைச் செய்வதற்குத் தயார் நிலையில் இவ் வலயங்களில் இருப்பார்கள்.

அரச மற்றும் தனியார் துறை வலயத்தில், அரச மற்றும் தனியார் துறைகள் எப்படி இயங்குகின்றன என்பது போன்ற தகவல்கள் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள், ஒவ்வொரு அமைச்சுக்களும் எப்படி மக்களுக்குச் சேவைகளை ஆற்றுகின்றன என்பது போன்ற தகவல்கள் வழங்கப்படும்.

கல்வி வலயம், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கும், உயர் கல்வியைப் பின்பற்றும் இதர மாணவர்களுக்கும் தேவையான தகவல்களைக் கொடுக்கும். பாடசாலையில் பாவிக்கும் பாடப்புத்தகங்களுக்கு ஈடான பல புத்தகங்களை இவ் வலயத்தில் கழிவு விலைகளில் வாங்கிக் கொள்ள முடியும். அத்தோடு, உயர் கல்வியை நாடும் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் போன்றனவும் துறைசார் வல்லுனர்களால் இவ் வலயத்தில் வைத்து வழங்கப்படும்.

Related:  வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத் தளங்கள் அகற்றப்படமாட்டாது - கமால் குணரட்ன

இஒ பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர் பலவிதமான பண்டங்களையும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம். முக்கியமாக முதலீட்டுச் சபையினால் (Board of Investment (BOI)) தயாரிக்கப்பட்ட ஆடைகளை வரியில்லாது இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

அத்தோடு, புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட வலயத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த விருதுகள் பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் போன்றவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

ஊடக வலயத்தில், பார்வையாளர்களும் ஊடக ஆர்வலர்களும் தங்களுக்குப் பிரியமான எலெக்ட்ரோனிக் ஊடககர்களோடு அளவளாவலாம். அதே வேளை தொலைக் காட்சிகளில் தகவல்கள் எப்படிக் காட்சிப்படுத்தப்படுகின்றன, அப்படி அவை தயாரிக்கப்படுகின்றன, செய்திகள் எப்படித் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன என்பது போன்ற தகவல்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். அத்தோடு பல அரச ஊடகங்கள் மக்களுடன் ஊடாடித் திரிந்து தகவல்களைச் சேகரிப்பதும் நடைபெறும்.

பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர் சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் இலவசமான மருத்துவ சேவைகளையும், ஆய்வுகூட சேவைகளையும் (lab services) பெற்றுக்கொள்ளலாம்.

விவசாய வலயத்தில், பல தரப்பட்ட சாகுபடி நடவடிக்கைகள், பயிர் முகாமைத்துவம் மற்றும் தென்னை, கஷு சாகுபடி போன்ற விடயங்களில் ஆலோசனைகளும், போதனைகளும் வழங்கப்படும்.

தேவையானவர்களுக்கு சட்ட உதவிகளும் வழங்கப்படும். இளயவர்களுக்கான பிரத்தியேக தொழிற்கல்வியும் வழங்கப்படும்.

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகளும் பொருட்காட்சி வலயத்தில் வழங்கப்படும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான கல்வித் தராதரப் பத்திரங்களை அத்தாட்சிப் படுத்துதல் போன்ற விடயங்களை தூதரக அதிகாரிகள் செய்து தருவார்கள்.

பிரதமரிந் கீழுள்ள தேசிய திட்ட அமைச்சினால் சிறு தொழில் முயற்சிகளுக்கான ஆலோசனைகள், இட வசதிகள் போன்றநவும் வழங்கப்படும்.

‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ பொருட்காட்சி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் நான்கு நாட்கள் நடைபெறும். இதன்போது பிரபல இசைக்குழுக்கள் வழங்கும் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)