India

‘என்னிட்டும் இடம் இல்லாதவர்’: ஈழத் தமிழ் அகதிகள் பற்றிய மலையாள விவரணத் திரைப்படம்

“30 வருடங்களாக நாங்கள் அகதிகளாக இங்கு வாழ்கிறோம். இப்படியே நாம் தொடர்ந்தும் வாழ வேண்டுமா”? என்று ஈழத்தமிழ் அகதியொருவர் கேட்பது கடலின் இரைச்சலோடு மெதுவாகக் கரைந்துபோக பிரின்ஸ் பங்காடனின் என்னிட்டும் இடம் இல்லாதவர் (Yet They Have No Space) என்ற படத்தின் தலைப்பு திரையில் தோன்றுகிறது. இந்தியா முழுவதும் பரவிஉக்கிடக்கும், மத்திய மாநில அரசுகளால் மறக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளது – குறிப்பாக கேரளாவில் வாழும் தமிழ் அகதிகள் – வாழ்வு பற்றிய கதைகளை மையமாககொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கேரளாவின் இவ்வருட சர்வதேச குறும்படவிழாவில் திரையிடப்படுகிறது. ஒரு ஊடகவியலாளரான பிறின்ஸ் இப் படத்தை எடுத்திருக்கிறார்.

பிறின்ஸ் (படம்:தி நியூஸ் மினிட்)

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட தக்குதல்கள் காரணமாக இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி ஓடிவந்த பல இலட்சம் அகதிகளின் நிலை பற்றிப் பேசுகிறது “இப் படம். கடந்த மூன்று தசாப்தங்களில் இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு அங்குள்ள வாழ்வு பற்றி மட்டுமே தெரியும். ஆனால் அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ள இந்தியா மறுத்துவிட்டது. அவர்கள் இலங்கையின் குடிமக்களும் அல்ல. அவர்களது பெற்றோர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படவில்லை. இவர்களின் பரிதாபகரமான நிலைமை என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்கிறார் இயக்குனர் பிறின்ஸ்.

“ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பிருந்தாலும், ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு தமிநாட்டிலுள்ள முகாம்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அங்கு வாழும் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகவும் சொற்பமான உதவிகளையே செய்துவருகிறது. அவர்களுக்கு அரச பதவிகள் வழங்கப்படுவதில்லை; சொத்துக்களை வாங்க முடியாது” என்கிறார் இப்படத்தில் தோன்றும் ஆராய்ச்சியாளரான சீ.வலதீஸ்வரன்.

பிறின்ஸ் கேரளத்தைச் சேர்ந்தவர். கேரளாவின் கொல்லத்திலுள்ள குளத்துப்புழ குடியிருப்பு மற்றும் பதனமித்தவிலுள்ள கவி குடியிருப்பு ஆகியவற்றிலுள்ள அகதிகள் பற்றியே இப்படம் பேசுகிறது. 1964 இல் செய்யப்பட்ட சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரித்தானியர் ஆட்சியின்போது வேலை நிமித்தம் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களில் 3 இலட்சம் பேர் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குடியேற்றபபட்டார்கள். அவர்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டன. மேலும் 5 இலட்சம் மக்கள் கொண்டுவரப்பட இருந்தார்கள்.

இதற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற தொடர்ச்சியான இனக்கலவரங்களினால் பல தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தார்கள். இவர்களுக்கு அடிப்படை உரிமைகளோ அல்லது குடியுரிமைகளோ வழங்கப்படவில்லை. இதற்கான அரசியல் காரணங்கள் பற்றி பிறின்ஸ் தனது கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக வலதீஸ்வரன் மூலமாக அவற்றைக் கொண்டுவருகிறார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAA) மர்றும் இந்திய பிரஜைகள் பதிவு (NRC) ஆகியன முஸ்லிம்கள எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் அதே வேளை இந்துக்களாக இருந்தும் இலங்கைத் தமிழர்களும் அதே பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்ரியும் படம் பேசுகிறது.

“இலங்கையை விட்டுத் தப்பி உயிர்பிழைப்பதற்காக இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கிடைத்த அனைத்தையும் கொடுத்துப் படகுகள் மூலம் இத் தமிழர்கள் தனுஷ்கோடி வருகிறார்கள். வழியில் இலங்கையின் கடற்படயினால் சுடப்பட்டு மரணமடைந்தவர்களும் உண்டு. ஒரு தடவை சுமார் 70 பேர் இப்படியாக உயிரிழ்ந்திருக்கிறார்கள். கரையை அடைந்தவர்கள்து நிலைமையும் பரிதாபகரமானது தான். முன்னர் அவர்கள் நேரே சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். பின்னர் அவர்கள் முகாம்களில் வைத்துப் பராமரிக்கப்பட்டாலும் அவற்றின் நிலைமையும் மிகவும் பரிதாபகரமாகவே உள்ளது. தமிநாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு இப்போது இம் முகாம்கள் தொடர்பாக அதிக அக்கறை எடுத்துவருகிறது” என்கிறார் பிறின்ஸ். (நன்றி: தி நியூஸ் மினிட்)