News & AnalysisSri Lanka

எனது நிபந்தனைகள் அனைத்தையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் – விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது உட்படத் தனது நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியின் தலைவர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பின்போது தனது ஆதரவைப் பெறுவதற்காக இந் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக விக்கிரமசிங்க வாக்குறுதி தந்தாரென திரு விக்னேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். சர்வ கட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்பொருட்டு கொழும்பு வந்திருந்த திரு விக்னேஸ்வரன் ஊடகங்களைச் சந்தித்தபோது இவ் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். தாம் பல நிபந்தனைகளை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி அவற்றை நிறைவேற்றுவாராகில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் பங்கெடுப்பது பற்றி நாம் யோசிப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“வாக்கெடுப்புக்கு முன்னர் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது நான் இந்த நிபந்தனைகளை முன்வைத்தேன். அவற்றை நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்டார். அதனால் தான் நான் அவருக்கு வாக்களித்தேன். அவர் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இப்போது அவர் கைகளில் இருக்கிறது. அதை ஞாபகப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என திரு.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபோது “நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளே இல்லை” என மிகவும் ஆணித்தரமாக மறுத்துவந்தவர் விக்கிரமசிங்க என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (தி ஐலண்ட்)