எதிர்க்கட்சித் தலைவர் மனை குறித்த கருத்துகள் வருத்தம் தருவன – திரு.சம்பந்தன்

Spread the love

ஜனவரி 22, 2020

திரு. ஆர். சம்பந்தன்

தனது உத்தியோகபூர்வ (எதிர்க்கட்சித் தலைவருக்கான) இல்லம் குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் மனத்தை வருத்துவதாக உள்ளன என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான திரு இராஜவரோதயம் சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவராக இல்லாதபோது அவருக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியிருப்பது குறித்து பாராளுமன்றத்தில் சிலர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவராக ஆகி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு 2017 இல் தான், தனக்கு உத்தியோக இல்லம் தரப்பட்டது எனவும் அது வரையில் தான் தனது ஒத்துளைக்காத வயதிலும், பல படிகளை ஏறித்தான் தனது வதிவிடத்துக்குப் (flat) போகவேண்டியிருந்தது எனவும் குறிப்பிட்டார்.


“உண்மையத் தெரியாது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதனை தரும் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்” என திரு. சம்பந்தன் தெரிவித்தார்.

தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனத்தைக்கூட அதிகம் பாவித்ததில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

திரு. சம்பந்தனின் கருத்துக்களுக்குப் பதிலளித்த சபைத் தலைவர் தினேஷ் குணவர்த்தனா, “2015 தேர்தலுக்குப் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தைக் கையளிப்பதைத் தாமதமாக்கியது முந்தய அரசாங்கத்தின் தவறு” எனக் கூறினார்.

திரு. சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து தற்போதய அரசாங்கத்துக்கு எந்தவித பிரச்சினையுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  மரணதண்டனை பெற்ற 'மிருசுவில் படுகொலை' இராணுவ வீரருக்கு மன்னிப்பு வழங்கப்படலாம்?

Leave a Reply

>/center>