எக் காரணத்துக்காகவும் வேட்பாளரை மாற்றமாட்டோம் - மஹிந்த ராஜபக்ச -

எக் காரணத்துக்காகவும் வேட்பாளரை மாற்றமாட்டோம் – மஹிந்த ராஜபக்ச

Spread the love

“எக் காரணத்துக்காகவும் ஜனாதிபதி வேட்பாளரை நாம் மாற்றப்போவதில்லை” என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேசமணடபத்தில் நடைபெற்ற பொருட்காட்சி வைபவத்தில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளரின் கேவிகளுக்குப் பதிலளித்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரித்தால் வேட்பாளர் மாற்றப்படுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “நிச்சயமாக இல்லை! நாங்கள் நியமிக்கும் ஒருவரை நாம் மார்றுவதில்லை. ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டால் அதில் உறுதியாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை இப்போதும் தொடர்கிறது. சமீபத்தில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் கோதபாய ராஜபக்சவுடன் மேற்கொண்ட சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது. இது ஒரு கட்சி மற்றக் கட்சியை விழுங்கிக் கொள்கிற விடயமல்ல. இரண்டு கட்சிகளும் தத்தம் தனித்துவங்களைக் கடைப்பிடிக்கும் இரண்டு சகோதரர்களைப் போன்றவை என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதில் அவசரப்பட்டுவிட்டீர்களா என்று கேட்டதற்கு “இல்லை, அது சரியான நேரம். அதனால் தான் ஜே.வி.பி. தனது வேட்பாளரை ஒரு வாரத்துக்குப் பிறகு அறிவித்தது. ஐ.தே.கட்சி தனது உட்கட்சிப் பிணக்குகளில் திண்டாடுவதால் தான் அவர்களால் இன்னும் ஒருவரையும் நியமிக்க முடியவில்லை. அவர்கள் கட்சியின் யாப்பைக் காரணம் காட்டினாலும், உண்மையில் உட்கட்சிப் பிரச்சினை தான் காரணம் எண்றார் ராஜபக்ச.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்பவே தேசியக் கொள்கைகள் வகுக்கப்படும் - பந்துல குணவர்த்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *