ஊரடங்கு உத்தரவு சட்டரீதியாக நடைமுறைப்பட்டதல்ல – எம்.ஏ. சுமந்திரன்
நாட்டின் பல பாகங்களிலும் ஜனாதிபதியினாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவு, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், சட்டத் தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“நோய்த் தொற்றுக் காரணமாக மக்கள் இவ்வுத்தரவுக்கு கீழ்படிந்து நடக்கிறார்களே அல்லாது, அவர்கள் எந்தச் சட்டங்களையும் மீறவில்லை. அவர்களை எக்காரணம் கொண்டும் கைதுசெய்யவோ அல்லது அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்யவோ முடியாது. அது சட்ட விரோத செயல்” என அவர் தெரிவித்தார்.
ஆனாலும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இவ்வுத்தரவுக்குக் கீழ்படிவது அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை என சுமந்திரன் தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதற்காரணங்கள் பலவுண்டு. ஆனால் அரசாங்கம் என்ன காரணக்களுக்காக அவற்றைப் பயன்படுத்தவில்லை என்பது தெரியவில்லை. எனவே ஊரடங்குச் சட்டத்தை ஒருவர் மீறினார் அல்லது நடமாடும் ஒருவர் ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கவில்லை என்பதற்காக அவர்களைக் கைது செய்ய அல்லது வாகனத்தைப் பறிக்கவோ உரிமையில்லை என அவர் தெரிவித்தார்.
“இக் காரணங்களை நான் ழுப்பியதற்காக ரஞ்சன் ராமநாயக்கா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்” என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனின் பிணை அனுமதியைத் தொடர்ந்து நேற்று நடிபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுமந்திரன் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.
இதே வேளை,