உலக மகளிர் தினம் | தொடரும் போராட்டம் -

உலக மகளிர் தினம் | தொடரும் போராட்டம்

மார்ச் 8, 2019

இன்று உலக மகளிர் தினம்.

ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற விடயங்களில் உலகம் எப்படிச் செயற்படுகின்றது என்பதை ஒரு தடவை எட்டிப் பார்க்க ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நாளைக் கொண்டாடுவதன் மூலம் பெண்களுக்கு மதிப்பைக் கொடுக்கலாமெனினும் கொண்டாடுவதற்கேற்ற சூழல் இன்னும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஐ.நா. சபை பொதுவாக இவ் விவகாரங்களில் புள்ளி விவரங்களைச் சேமித்து, ஆராய்ந்து, பரிசீலித்து முடிபுகளை முன் வைக்கிறது. அளவுகோல் எல்லோருக்கும் பொருந்தாதெனினும் ‘உள்ளதுக்குள் வள்ளிசு’ என எடுத்துக் கொள்ளலாம்.

உலக மகளிர் பற்றிய அறிக்கை 2015-2016

இது சம்பந்தமான தகவல்கள் ஏதும் உண்டா எனப் பார்க்க உசாத்துணைக்கு ஐ.நா. அறிக்கையை நாடினோம். சில விடயங்கள் கண்ணில் பட்டன:

  • சராசரியாக ஒப்பீட்டளவில் உலகப் பெண்கள் ஆண்களை விட 23% குறைவாகவே சம்பாதிக்கின்றனர். 
  • அபிவிருத்தியடைந்த நாடுகளில் இது 24%.
  • தென்னாசியாவில் 30%
  • மத்திய கிழக்கு / வட-ஆபிரிக்கா 14% (ஆச்சரியம் ஆனால் இது ஐ.நா.அறிக்கை!)
  • ஓய்வூதியம் பெறும் விடயங்களில் ஆண்-பெண் விகிதாசரம்: அமெரிக்கா 95% / 91% (பரவாயில்லை!)
  • பிரேசில் 91%/83%
  • பொலிவியா 100%/100%
  • பொட்ஸ்வானா 100%/100%

பெண்கள் சமத்துவ விடயங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளை விட ஆபிரிக்காவும் தென்னமெரிக்காவும்  முன்னணியில் இருக்கின்றன. ஆனாலும் அபிவிருத்தியடைந்த நாடுகள் இன்னும் சமத்துவம் பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் இன்றும் உயர்சாதியைத் தொட்டதற்காக பெண்ணொருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

கனடாவில் பிரதமர் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட பெண்ணீயவாதியாக இருந்தாலும் அவரது அமைச்சரவையில் இருந்து பெண்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் சமத்துவத்தை ஆண்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ‘இந்தா பிடி’ என்று ஒரு ஆண் சொல்லித் தரும்போது அதைப் பெற்றுக் கொள்வதும் ஒரு வகையில் ‘நீ என் அடிமை’ என்பதை உறுதிப்படுத்துவதாகவே கொள்ள வேண்டும்.

பெண்கள் சமத்துவத்தில் ஆண்களுக்கும் சம பங்கிருக்கிறது. அது ‘கொடுப்பதில்’ இல்லை. இருப்பதை ஏற்றுக்கொள்வதில் தானுண்டு. ஆண்கள் அதை இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தொடரும் போராட்டம் தான்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *