உலக பொருளாதார மந்தநிலையால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும் - சர்வதேச நாணைய நிதியம் -

உலக பொருளாதார மந்தநிலையால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும் – சர்வதேச நாணைய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

உலக பொருளாதாரத்தின் ஒத்திசைந்த மந்த நிலையால் பல நாடுகள் பாதிக்கப்படப் போகின்றன அதில் இந்தியா கடுமையான் பாதிப்புக்குள்ளாகும் என புதிதாகப் பதவியேற்ற சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரலீனா ஜியோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இலையுதிர்காலக் கூட்டங்களுக்கு முன்னாதாகத் தன் கருத்தைத் தெரிவிக்கையில் உலகின் 90 வீதமான நாடுகளின் பொருளாதாரம் வெகுவாகத் தளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2019 -2020 ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி இந்த தசாப்தத்தின் ஆகக் குறைந்த நிலையை எட்டும் எனவும், உலகிடை வாணிபம் ஏறத்தாள இயங்கா நிலைக்கு வந்திருக்கிறதென்றும், இந்தியா பிரேசில் போன்ற நாடுகளில் இந்த வருடமே இத் தளர்வு நிலை வெளிப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2020 இல் வளர்ச்சி மீண்டும் தலி தூக்குமாயினும் நாடுகளிடையேயான பிணக்குகள் உருவாக்கப் போகும் மாற்றங்கள் ஒரு தலைமுறைக்கு நீடிக்கும் எனவும், ‘தொழில் நுட்பச் சுவர்களே’ இனிமேல் நாடுகளைப் பிரிப்பனவாக இருக்குமெனவும் அவர் எத்ரிவு கூறினார்.

நாடுகள் தமக்கிடையே புரிந்து வரும் தீர்வை வரிப் போர்களினால் எல்லோருமே இழப்புகளை எதிர்கொள்ள வேண்டி வருமெனவும் சகலரும் ஒரு பொதுவான வேலைத் திட்டத்துக்கு இறங்கிவந்து செயற்படவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *