உலக நிர்வாண சைக்கிள் ஓட்டம் – ரொறோண்டோவில் ஜூன் மாதத்தில்…

தயாராகுங்கள் மக்களே! மீண்டும் உங்கள் தெருக்களுக்கு வருகிறது பலரும் ஆவலோடு எதிர்பார்த்த நிர்வாண சைக்கிள் ஓட்டம். இந்த வருடம் கோவிட் தொற்றினால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் மனங்கள் புத்துணர்ச்சி பெற வசந்தகாலத் திருவிழாவாக வருகிறது நிர்வாண சைக்கிளோட்டாம்.

உடைக் கட்டுப்படு என்று எதுவுமில்லை. பிறந்த மேனியே போதும் என்கிறார்கள் அமைப்பாளர்கள். ஆனால் சைக்கிள் ஓடத் தெரிந்திருக்க வேண்டும். டபிள் போக முடியாது.

பிறந்த மேனி விடுதலை இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த உலக நிர்வாண சைக்கிள் ஓட்ட நிகழ்வு சுதந்திரமான, சுத்தமான, வாகனங்களில்லாத, பாதுகாப்பான வீதிகளைத் திருப்பித் தாருங்கள் என்ற பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படுகிறது.

‘இவ் விடுதலை ஓட்டம்’ உலகின் பல நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ரொறோண்டோ வாசிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டியிருக்கிறது.

ஜூன் மாதம் 12ம் திகதி சனிக்கிழமை, இந் நிகழ்வு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரொறோண்டோ லேக்‌ஷோர் / ஃபோர்ட் யோர்க் சந்தியில் அமைந்துள்ள கொறோனேஷன் பார்க்கிலிருந்து பி.ப. 1:00 மணிக்கு ஆரம்பமாகும் இவ்வோட்டம் யங்-டண்டாஸ், ட்றினிற்றி பெல்வூட்ஸ் பார்க், ரொறோண்டோ பல்கலைக்கழகம், கென்சிங்டன் சந்தை வழியாகச் செந்று ஜாக் லெயிட்டன் ஞாபகார்த்த பாதை துறைமுகத்தில் முடிவடையும். அங்கிருந்து விரும்பியோர் ‘ஆடை கட்டாயமற்ற’ ஹன்லான் கடற்கரைக்கு பாதை (ferry) மூலம் செல்லலாம்.

இவ்வோட்டத்தில் சைக்கிள்களோடு, rollerblades, rollerskates அல்லது skateboards ஆகியவையும் அனுமதிக்கப்படும். உடல் மீது வர்ணங்கள் பூசி உடலை மறைப்பது அனுமதிக்கப்படமாட்டாது என்பதையும் உங்கள் மகிழ்ச்சிக்காக அமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமூக இடைவெளி நிச்சயம் உண்டு. ஆனாலும் அதைக் கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என அமைப்பாளர் நம்புகின்றனர்.