IndiaTamil History

உலகில் அதிசிறந்த உருக்கு புராதன தமிழ்நாட்டில் செய்யப்பட்டது

கி.மு.6ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பாவிக்கப்பட்ட அதிசிறந்த உலோகங்கள் சேர நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டன

வூட்ஸ் உருக்கு (Wootz steel) அல்லது டமாஸ்கஸ் உருக்கு (Damascus steel) புராதன உலகத்தின் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. அதன் வளைந்து நெளியும் தன்மையால் வூட்ஸ் உருக்கு அந்தக்காலத்தின் உலோகவியலில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

‘டமாஸ்கஸ் வாள்கள்’ என அழைக்கப்படும் உருக்கில் செய்யப்பட்ட வாள்கள் உலகில் சிறந்தவை எனப் பெயர்பெற்றிருப்பினும், அவை எல்லாம் தமிழ்நாட்டு உருக்கிலேயே செய்யப்பட்டவை என்பது பலருக்கும் தெரியாது.

6ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த உலோகங்கள் சேர நாட்டிலே செய்யப்பட்டு உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டன.

துவாரங்கள் நிறைந்த இரும்பை உருக்கி சுத்தியலால் அடித்து உருக்கை உருவாக்கும் இம் முறையைத் தமிழர்களே கண்டுபிடித்திருந்தனர். இந்த உலோகம் பின்னர் களிமண்ணினால் செய்யப்பட்ட கலத்தில் வைக்கப்பட்டு மரத்துகள்களால் மூடப்பட்டு எரியூட்டப்படும். அப்போது கரியாக்கபடும் மரத்தூள் இரும்புடன் சேர்ந்து உருக்காகிறது எனவே நம்பப்படுகிறது. உண்மையான நடைமுறை வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டது. சிலவேளைகளில் இந் நடைமுறை மேலும் சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம்.

அவர்கள் கைக்கொண்டார்கள் என நாம் கருதும் நடைமுறையை நிரூபிக்கும் தருணம் இப்போது வந்துவிட்டது. பங்களூருவிலுள்ள தேசிய உயர்கல்வி நிறுவனத்தைச் (National Institute of Advanced Studies) சேர்ந்த பேராசிரியர் சாரதா சிறினிவாசன் இது பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பேராசிரியர் சிறினிவாசன் வூட்ஸ் உருக்கு பற்றி நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வருபவர். இவ் விடயத்தில் பல ஆய்வறிக்கைகளைப் பிரசுரித்திருக்கும் அவர் உலோகவியலின் முக்கியத்துவம் பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்.

Wootz Steel from Tamil Nadu
வூட்ஸ் உருக்கில் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாள் – படம்: பின்றெஸ்ட்

இதுவரையில் கிடைக்கப்பெற்ற உலோகவியற் தடயங்கள் தமிழ்நாடு, ஆதிச்சநல்லூரில் பெறப்பட்டவையே. இவை தற்போது சென்னையிலுள்ள தமிழ்நாடு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சிறினிவாசன் இவற்றை மிக உன்னிப்பாக ஆராய்ந்தவர்.

பேராசிரியர் சிறினிவாசன் இவ்வுலோகவியற் தடயங்களை எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் மூலம் ஆராய்ந்ததில் அவை துளைகளை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். மிகவும் சிக்கலான உலோகவியல் முறைகளைப் பாவித்தே அவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவற்றைச் செய்தவர்கள் அந் நடைமுறைபற்றிய பேரறிவு கொண்டவர்களாக, திரும்பத் திரும்ப இன் நடைமுறைகளைச் செய்து சரியானதொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் (trial and error) என்றும் கருதவேண்டி இருக்கிறது.

இவ்வுலோகங்கள் வார்ப்பிரும்பையும் (cast iron) செயற்கை இரும்பையும் (wrought iron) ஒன்றாக உருக்குவதன் மூலம் அல்லது செயற்கை இரும்புக்கு கரியைச் சேர்த்துக்கொள்வதன் மூலமே இவ்வுலோகங்கள் செய்யப்பட்டன என்றே முன்னர் கருதப்பட்டு வந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்களால் செய்யப்பட்ட அதிகூடிய கரிஉருக்கைச் செய்யும் முறையை அறிந்துகொள்ள இன்னும் போதுமான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.

பேராசிரியர் சிறினிவாசன் இவற்றுக்கெல்லாம் சரியான பதிலைக் கண்டுபிடிக்கும் நிலையை எய்தியிருக்கலாம். அவரது புதிய ஆய்வறிக்கையின்படி, 1400 பாகை செல்சியஸ் வெப்பத்தில், நீண்ட நேரத்துக்கு, இரும்புடன் மரத்தின் கரியைச் சேர்த்து எரிப்பதன் மூலமே சாத்தியமாகும் எனக் கருதக்கூடியாதாகவுள்ளது.

தமிழ்நாடு நடைமுறை’ என அழைக்கப்படும் அவரது ஆய்வறிக்கையில், அந்தக் காலத்தில் கையாளப்பட்ட உலோகவியல் நடைமுறைகளைத் திறம்படக் கற்றிருந்த, புரிந்துகொண்ட சிலரால் மட்டுமே இது சாத்தியமாகும் என அவர் குறிப்பிடுகிறார்.

வூட்ஸ் உருக்கில் செய்யப்பட்ட கைவாள் – படம்: ஜஸ்லின் காவுர் / ஃபிளிக்கர்

இந்த நடைமுறையைப் பாவித்துத்தான் நவீன உருக்கின் பல வரையறாக்கள் செய்யப்படுகின்றன.

பேராசிரிய சிறினிவாசனின் முன்னைய ஆய்வறிக்கையொன்று ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலத் தடயங்கள் பர்றியது. செப்பும் தகரமும் (copper and tin) சேர்த்து எரியூட்டப்பட்டு உருவாக்கப்படுவதே வெண்கலம். ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட வெண்கலப் பொருட்களும் மிகச் சிறந்த ரகத்தின என அவர் கூறுகிறார்.

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலப் பொருட்களில் கலக்கப்பட்ட தகரம் (tin) 23% எனப் பேராசிரியர் சிறினிவாசன் கண்டுபிடித்திருந்தார். இக்கலவை வெண்கலத்தைத் தகடாக்குவதை இலகுவாக்குகிறது. அதி உயர்ந்த வெப்பநிலையில் வெண்கலத்தைச் சூடாக்கிப் பின்னர் அதிவிரைவாகக் குளிரூட்டுவதன் மூலம் உலோகத்தின் இளகு பலத்தையும் (tensile strength) நாத அதிர்வையும் (tonality) அதிகரிக்க உதவுகிறது.

இப்படியான உயர்தரமான வெண்கலத்தை உருவாக்க அதி உயர் வெப்பனிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் உலைகள் முக்கியம் எனவும் மேல் சிறுவலூரில் கண்டுபிடிக்கப்பட்ட உலைகள் அதி உயர் கரி உருக்கினால் செய்யப்பட்டவை எனவும் பேராசிரியர் சிறினிவாசன் கண்டுபிடித்திருக்கிறார்.

வெண்கல ஆராய்ச்சியில் தொடங்கிபி பின் அவை தயாரிக்கப்பட்ட உலைகளை ஆராய்ந்தபோதே அவர் உருக்கினாற் செய்யபப்ட்ட உலகத் தரம் வாய்ந்த வாள்கள் பற்றிய ஆய்வறிக்கையை எழுதவேண்டி ஏற்பட்டது.

இவ்வாராய்ச்சிகள் பற்றிப் பேசும்போது, எமது விஞ்ஞான, தொழில்நுட்ப பாரம்பரியத்தைப் பேணுவதற்கான விழிப்புணர்வு அவசியம் எனவும் விஞ்ஞான தொல்லியலைப் பாடமாகக் கற்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் சிறினிவாசன் கூறினார்.

மூலம்: ‘The Better India’