உலகின் அதி கூடிய வயதுடைய டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை 110 வயதில் மரணம்

விளையாட்டு



World's oldest Test cricketer dies at age of 110
லோர்ட்ஸ் மைதானத்தில் ஐலீன் ஆஷ் (2017) படம்: BBC

உலகின் அதிகூடிய வயதுடைய டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை ஐலீன் ஆஷ் தனது 110 ஆவது வயதில் மரணமானார்.

1937 இல் இங்கிலாந்தின் பெண் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பந்துவீச்சாளராக ஆட ஆரம்பித்த ஐலீன் 1949 இல் ஓய்வு பெற்றிருந்தார்.

தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்து 80 வருடங்களுக்குப் பிறகு 2017 இல், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பெண்களின் உலகக் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியை ஐலீன் ‘மணி அடித்து’ ஆரம்பித்து வைத்திருந்தார். இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது.

யோகாசனப் பயிற்சி, ஸ்னூக்கர் விளையாட்டு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமுடைய அவர் ஒரு வலது கை மத்திய வேலப் பந்துவீச்சாளராவார். ஐலீன் வீலன் என்ற தனது பிரப்புப் பெயரில் அவுஸ்திரேலியாவில் தனது முதலாவது ஆட்டத்தைத் தொடங்கிய ஐலீன் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவரது வாழ்நாள் சராசரி ஓட்ட விடுகை 23 ஆகும்.

இங்கிலாந்தில், ‘சிவில் சேர்விஸ் பெண்கள்’, ‘மிடில்செக்ஸ் பெண்கள்’, ”சவுத் பெண்கள்’ ஆகிய கழகங்களுக்காக விளையாடினார்.

2019 இல் ஐலீனுடைய உருவப்படம் லோர்ட்ஸ் மைதானத்தில் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டிருந்தது.