உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்!

Spread the love

ஜனவரி 18, 2020

உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா

உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது.

இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு, அவருக்கு கின்னஸ் சாதனைக்கான விருது வழங்கப்பட்டிருந்ததது. இருப்பினும் விரைலேயே நேபாளத்தைச் சேர்ந்த 54.6 செ.மீ. உயரமுள்ள சந்திர பகதூர் டாங்கி இவரது பட்டத்தைப் பறித்துவிட்டார். பின்னர், 2015 இல் டாங்கி இறந்ததும் கின்னஸ் பட்டம் இவருக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது.

“அவர் பிறக்கும்போது இரண்டு உள்ளங்கைகளுக்குள் அவரை வைத்திருப்போம், அந்தளவுக்கு அவரது உடல் மிகவும் சிறியது. குளிப்பாட்டுவது போன்ற தினக் கடமைகளைச் செய்வது மிகவும் சிரமம் ” என அவரது தந்தையார் ரூப் பகதூர் கூறியதாக கின்னஸ் கூறுகிறது.

கின்னஸ் சாதனை மூலம் உலகப் பிரசித்திபெற்றதன் மூலம் அவர் அமெரிக்கா, ஐரோப்பா உட்படப் பல உலகநாடுகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அழைப்பில் சென்று வந்திருக்கிறார்.

“குகேந்திரா மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி நேபாளத்திலிருந்து வந்த போது நாங்கள் மிகவும் துன்பப்பட்டோம்” என கின்னஸ் சாதனை நூலின் பிரதம ஆசிரியர் கிறேக் கிளெண்டே தெரிவித்துள்ளார்.

உலகத்திலேயே அதிக உயரமுள்ள எவர்ஸ்ட் சிகரத்தை உலகெங்கும் பிரபலப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க நேபாளம் உலகில் அதிக குள்ளமான மனிதரைப் பாவிக்க வேண்டி வந்ததுதான் முரண் நகை.

இவர் தன் வாழ்நாளில் உலகத்தில் இருக்கக்கூடிய குள்ளமான மனிதர்களை எல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்களில் ஒருவர் ஜோதி அம்கே எனும் பெண். இவர் இந்தியாவில் இருக்கிறார்.

இவரின் மரணத்துக்குப் பிறகு, கொலம்பியாவைச் சேர்ந்த 70.21 செ.மீ. உயரமுள்ள எட்வார்ட் ‘நினோ’ ஹேர்னாண்டேஸ் இற்கு இச் சாதனை போகிறது என கின்னஸ் அறிவித்திருக்கிறது.

மூலம்: ஏ.பி. செய்தி நிறுவனம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>