Spread the love

ஜூலை 25, 2020: கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக இறுதி உயிலில் கையெழுத்திடுவது சாத்தியமற்றதாகையால் Zoom அல்லது Facebook live போன்ற காணொளிகளின் மூலம் சாட்சிகள் உயில் வழங்குபவரின் செயற்பாட்டுக்கு அத்தாட்சி வழங்கலாம் என பிரித்தானிய அரசு சட்டம் வகுத்துள்ளது. இச் சட்டம் ஜனவரி 31 வரைக்கு பின்னோக்கி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்கிலாந்திலும், வேல்ஸிலும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சட்டம், கொறோணாவைரஸ் தொற்றினால் வழக்கறிஞர் முன்னிலையில் போக முடியாத நோயாளிகளின் இறுதி விருப்பங்களை நிறவேற்ற உதவியாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள நடைமுறையில், உயில் வழங்குபவரது செயற்பாடு இரண்டு சாட்சிகளினால் வழக்கறிஞர் முன்னிலையில் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இனிமேல், காணொளிகள் மூலம் சாட்சிகள் வழங்கும் அத்தாட்சியைச் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியுமென பிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானித்திருக்கிறது. இச் சட்டம் ஜனவரி 31, 2022 மட்டும் அமுலிலிருக்கும்.

நேரடியாகக் கையெழுத்திடக்கூடிய வசதிகள் இருப்பின் அதுவே விரும்பத்தக்கது எனவும், அது இயலாத பட்சத்திலேயே வீடியோ தொழில்நுட்பம் பாவிக்கப்பட வேண்டுமெனவும் அரசு வலியுறுத்துகிறது. இவ் விடயத்தில் எலெக்ட்றோணிக் கையெழுத்துகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

Print Friendly, PDF & Email
Related:  இன்று முதல் பாவனைக்கு வருகிறது - ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட்-19 தொற்றாளரைக் கண்டுபிடிக்கும் Covid Alert app!