Spread the love

பயங்கரவாத தரவுகளைப் பரிமாறுவதில் இணக்கம்

28 August 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 50,000 வெளிநாட்டு போராளிகளின் பெயர்கள் உட்பட்ட என்ணற்ற தனது தரவுக் களஞ்சியங்களின் database) பாவனைக்கான அனுமதியை ‘இண்டர்போல்’ சிறீலங்காவின் காவற்துறைக்குக் கொடுத்திருகிறது.

உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு இண்டர்போல் உதவி! 1
Jurgen Stock – Interpol

பரந்துபட்ட ஒத்துழைப்பு, பயிற்சி, நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை சிறீலங்காவின் காவற்துறை ‘இண்டர்போலிடமிருந்து’ பெற்றுக்கொள்வது தொடர்பான சந்திப்பொன்று நேற்று இருதரப்பினருக்குமிடையில் கொழும்பில் நடைபெற்றது.

இச் சந்திப்பைத் தொடர்ந்து ‘இண்டர்போல்’ செயலாளர் நாயகம் ஜேர்கென் ஸ்டாக் மர்றும் சிறீலங்கா காவற்துறை அதிகாரிகள் இணைந்து வழங்கிய ஊடக மாநாட்டில் தகவல்கள் பரிமாறப்பட்டது. ஸ்டாக் பதவியேற்றதன் பின்னர் சிறிலங்காவிற்கு வருகை தருவது இதுவே முதல் தடவை.

“முன்னறிவிப்பு (எச்சரிக்கை) விடயங்களில் சிறீலங்கா எம்முடன் பங்காளியாக இருப்பதை நாம் விரும்புகிறோம். எங்களிடம் இருக்கும் தகவல்கள் அனைதையும் பாவிப்பதற்கு உங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் உள்ளக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், முக்கிய தகவல்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளுவதன் மூலம் உலகம் முழுவதற்கும் நாம் ‘முன்னெச்சரிக்கை’ தரும் கருவிகளாக இருப்போம்” என ஸ்டாக் மேலும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 194 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ‘இண்டர்போல்’ பலதரப்பட்ட பயிற்சிகள், திறன் கட்டமைப்பு, வேலைத்திட்டங்களை ஒழுங்கு செய்தல் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

ஜனாதிபதி, பிரதமர், பிரதி காவல்துறை மா அதிபர் போன்றவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாக் இச் சந்திப்பு மிகவும் பலந்தருவதாயிருந்தது என்றும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு அவசியமென்றும் குறிப்பிட்டார். உங்களுடைய ஒத்துழைப்பின்றி பயங்கரவாதத்தின் சூத்திரதாரியான அஹமெட் மில்ஹான் ஹயாத்துவை நாங்கள் மத்தியகிழக்கிலிருந்து பிடித்திருக்க முடியாது என்றார் அவர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின் உள்ளக சந்தேகநபர்கள் தொடர்பான 1 ரெறா பைட் (1TB) தகவல்களை ஆய்வு செய்வதற்கு நாங்கள் உதவி புரிந்திருக்கிறோம் என்றவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  பிரேமதாச கட்சியினதும் கூட்டமைபினதும் தேர்தல் அறிக்கைகளிடையே தொடர்பு இருக்கிறது - மஹிந்த ராஜபக்ச