Spread the love

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து நாடெங்கும் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது உடுனுவர பகுதியிலுள்ள பல்வேறு மசூதிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள், கத்திகள், கோடரிகள் போன்ற ஆயுதங்களை வெலம்பொட காவல்துறையினர் மசூதிகளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாக அறியப்படுகிறது.

எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு மசூதிகளில் பெருமளவு விலங்குகளைக் கொல்வதற்கு இவ்வாயுதங்கள் அவசியமென்று அப் பகுதியிலுள்ள மசூதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே அவை திருப்பிக் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வெலம்பொட பொறுப்பதிகாரி கண்டி தலதா மாளிகைக்குக் கடமையின் நிமித்தம் சென்றிருந்த வேளையில் தற்காலிக பொறுப்பை ஏற்றிருந்த அதிகாரி ஆயுதங்களைத் திருப்பிக்கொடுத்திருந்தார் என வெலம்பொட காவல்துறைப் பணியகம் தெரிவித்ததாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

திருப்பிக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களில் 76 வாள்கள், கத்திகள் மற்றும் 13 கோடரிகள் அடங்கும்.

 

 

 



Print Friendly, PDF & Email
Related:  பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி - நாளை கண்டியில் நடைபெறும் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளலாம்?