Spread the love

“அப்படியொரு எச்சரிக்கை பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தன

ஜூன் 22, 2020: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே இலங்கைக்கு அது பற்றி நாம் எச்சரித்திருந்தோம் எனவும் இலங்கை அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பாக்கிஸ்தானின் இலங்கைக்கான தூதுவர் முஹாமட் சாட் கட்டாக் பாக்கிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படியொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது பற்றித் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், தமக்குக் கிடைத்த ஒரே எச்சரிக்கை இந்தியாவிடமிருந்து மட்டுமே கிடைத்திருந்தது” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் றுவான் விஜதவர்த்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.



தாக்குதல் நடைபெறப் போவதுபற்றி, இலங்கையின் உளவுத்துறைக்கு இந்தியாவிடமிருந்து ச்சரிக்கை கிடைத்திருந்ததெனவும் ஆனால் தாக்குதல்கள் முடிந்த பின்னரே அதுபற்றி உளவுப்பிரிவு தனக்கு அறிவித்தது எனவும் விஜேவர்த்தனா மேலும் தெரிவித்தார். அதே வேளை, உளவுப் பிரிவு தமக்கு இவ்வெச்சரிக்கை பற்றி அறிவித்தல் தரவில்லை என முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவும், முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்கவும் தெரிவித்து வருகின்றனர்.

ஐசிஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்களின்போது 250 பேர் கொல்லப்பட்டும், 500 பேருக்குமேல் காயமடைந்தும் இருந்தனர்.

Print Friendly, PDF & Email
Related:  கருணா விவகாரம் | எப்படிச் சுழற்றப் போகிறார்கள் ராஜபக்சக்கள்?