News & AnalysisSri Lanka

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் பின்னால் ஒரு பாரிய சதித்திட்டம் இருக்கிறது, நெளஃபர் மெளலவி சூத்திரதாரி அல்ல – சட்டமா அதிபர்

மர்மம் துலங்குகிறதா?

 

தாக்குதல்கள் நடைபெறப்போகும் திகதி, நேரம் ஆகியன புலனாய்வுப் பிரிவிற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ‘வெளிநாட்டவர்கள்’ வேறு யாருமல்ல, இச் சதியைத் திட்டமிட்டவர்களே. அவர்கள் யாரென்பது வெளியிடப்படும் சாத்தியங்கள் குறைவு

சட்டமா அதிபர் டப்புல டெலிவேர

ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னால் பாரிய சதித் திட்டம் ஒன்று அரங்கேறியிருப்பதற்கான தடயங்கள் இருக்கக்கூடும் எனத் தான் சந்தேகிப்பதாக சட்டமா அதிபர் டப்புல டெலிவேரா தெரிவித்துள்ளார்.

இந்த மாத முடிவில் இளைப்பாறவிருக்கும் டப்புல டெலிவேரா, சிரச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் ” உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களின் பின்னால் பாரிய சதிவலையொன்று பின்னப்பட்டிருப்பதற்கான தடயங்கள் உள்ளனெ. அதில் அரச புலனாய்வுப் பிரிவு சம்பந்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் நடைபெறப்போகும் திகதி, நேரம் ஆகியன புலனாய்வுப் பிரிவிற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஆதாரங்களுடன் இவ்விடயம் வெளிக்கொணரப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“ஆதாரங்கள் வேறுவகையாக இருந்தும்கூட, தாக்குதல்களின் சூத்திரதாரி நெளஃபர் மெளலவி என அரசாங்கம் முடிவ்டுத்துள்ளமை தவறு, அதற்கான ஆதாரங்கள் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சாஹ்ரான் ஹாஷிம் தன்னை வெடித்துக்கொண்டிருந்தாலும் சதியில் ஈடுபட்ட பலரில் அவர் ஒரு பங்காளி மட்டுமே. இக் குண்டுவெடிப்பின் பின்னால் அடையாளம் தெரியாத வெளிநாட்டுக்காரர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை விசாரணையாளர் முன்வைக்கவில்லை. அந்த அடையாளம் தெரியாதவர்கள் தான் சதியில் சம்பந்தப்பட்டவர்கள். ‘இந்த வெளிநாட்டவர்கள் யாரென்பது ஒருபோதுமே வெளியிடப்படமாட்டாது என்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு” என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.