உயிரிழை பாதிப்புற்றோருக்கான மருத்துவ கட்டிடம் திறந்து வைப்பு

அநைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) வின் இன்னுமொரு சேவை

உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் மருத்துவ மற்றும் இயன் மருத்துவ தேவைகளுக்கான கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 2009 க்குப் பின் ஏற்பட்ட போருக்குப் பின்னான காலகட்டத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பாரிய பங்களிப்பை ஆற்றி வரும் IMHO நிறுவனமானது வாழ்வாதார உதவிகள், அடிப்படை வசதிகள், மலசல கூட வசதிகள் என்பனவற்றில் கூடிய கவனத்தோடு உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வந்தனர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை முன்னேற்றும் தெற்கு அவர்களின் உதவியானது இன்று பெரும் பங்கு வகிக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக மாங்குளத்தில் இவ்வமைப்பின் பிரதான அலுவலகம் அதனுடன் கூடிய பராமரிப்பு இல்லம் ஒன்றினையும் அமைத்து  பயனாளிகளைப் பராமரித்து வருகிறது. ஆனால் இங்கு இதற்கான மருத்துவ வசதிகளை கொன்ட தனியான இடம் இல்லாதது மிகவும் சிரமமாக இருந்தது அதனை பூர்த்தி செய்யும் முகமாக IMHO நிறுவனம் முன் வந்து மருத்துவம் மற்றும் அதனுடன் கூடிய இயன் மருத்துவ கட்டிட தொகுதி ஒன்றினை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இவ் மருத்துவ அறையானது அங்கிருக்கும் பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அமைப்பின் அனைத்து பயனாளிகளின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக இந்த கட்டிடத் தொகுதி அமைந்திருக்கின்றது. எனவே இனி வரும் காலங்களில் இங்கிருந்துதான் பயனாளிகள் அனைவருக்குமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள மாங்குளம் பிரதேசத்தை அன்டிய சூழலில் வாழும் மக்களுக்கான மருத்துவ சேவைகளையும் இம்மருத்துவமனையிலேயே பெறக்கூடியதாகவிருக்கும்.

IMHO நிறுவனத்தின் சார்பில்  Dr ராஜம் திரு.முரளி  மற்றும் Dr. சத்தியமூர்த்தி ஆகியோர் இக்கட்டிடத்தைத் திறந்து வைத்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தார்கள்.