உங்கள் வாழ்க்கைத் துணை யார்? - முகனூல் அறியும்! -

உங்கள் வாழ்க்கைத் துணை யார்? – முகனூல் அறியும்!

Spread the love
உங்கள் படங்களைப் பகுத்தாய்வதன் மூலம் நீங்கள் யாருடன் வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்பதை முகனூல் தெரிந்து கொள்ளும். இத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை ஒன்றை முகனூல் நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம்  விளம்பரங்களை முகனூல் பாவனையாளரை இலக்கு வைத்து விளம்பரங்களைச் செய்ய அது உத்தேசித்துள்ளது.
ஒரு வீட்டில் எத்தனை பேர் வாழ்கின்றார்கள், அவர்களது வயது, பால் என்பன போன்ற விடயங்களைப் பாவனையாளர்கள் பகிர்ந்து கொள்ளும் படங்களை வைத்து துல்லியமாகத் தரவுகளைச் சேகரிக்க வல்ல மென்பொருளை முகனூல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இருப்பினும், காப்புரிமைக்கு விண்ணப்பித்ததால் அம் மென்பொருள் கட்டாயமாகப் பாவிக்கப்படவேண்டுமென்பதில்லை என்று முகனூல் நிறுவனம் கூறியதாகவும் ஒரு தகவல்.
ஏற்கெனவே விளம்பரதாரர்கள் உங்கள் குடும்பங்களை இலக்கு வைத்து விளம்பரம் செய்ய முகனூல் அனுமதியளிக்கிறது. இதன் மூலம் குடும்பத்தின் ஒரு அங்கத்தவரின் நுகர்வுப் பழக்கங்களை அவதானித்து அவரது குடும்பப் பெயர், விலாசம் போன்ற பொது அடையாளங்களைக் கொண்டு அவர்களை நோக்கி விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன.

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  நோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை!