ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் – ரஜினிகாந்த்

Spread the love

பெப்ரவரி 5, 2020

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக மீண்டுமொரு எதிர்ப்பலை உருவாகி வருகிறது.

“மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல, அப்படி ஒரு முஸ்லிம் தானும் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராகப் போராட்டத்திற்கு நான் தலைமை தாங்கி முன்னின்று நடத்துவேன்” என ரஜினிகாந்த் இன்று தெரிவித்திருக்கிறார்.

“முஸ்லிம்கள் எவரையும் எங்கேயும் அனுப்பிவிட முடியாது. நாடு பிரிக்கப்படும்போது பாகிஸ்தாநை விரும்பியவர்கள்அங்கு சென்றுவிட்டார்கள். இந்தியாவே தமது தாய்நாடு எனக் கருதியவர்கள் இங்கேயே தங்கி விட்டார்கள். இதைப் புரியாமல் சிலர் குழப்பம் விளைவிக்க முயல்கிறார்கள்.


சில அரசியல் கட்சிகள் மக்களைப் பிழையான வழிகளில் தூண்டி விடுகிறார்கள். மாணவர்கள் போராட்டங்களில் குதிப்பதற்கு முன்னர் இவ் விடயங்களைப் பற்றி ந்ன்றாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

தேசிய மக்கள் பதிவு என்பது வெளிநாட்டாரிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினால் 2011 இலும், பின்னர் 2015 இலும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவேதான் இப்போது தேசிய குடியுரிமைப் பதிவு என்ற பெயரில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

இலங்கை அகதிகள் விடயத்தில், தமிழ் நாட்டில் தொடர்ந்தும் வாழ விரும்புபவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என அவர் ஊடகவியலாளரிடம் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது தெரிவித்தார்.

தனியார் சிலருக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்து வட்டி வாங்கியமை தொடர்பாக வருமானவரித் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பாகக் கேட்டதற்கு, “நான் நேர்மையாக வரி செலுத்தும் ஒரு குடிமகன். எந்த சட்டவிரோத வழிகளிலும் நான் பணம் சம்பாதித்தவனல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்ரேர்லைட் போராட்டங்கள் தொடர்பாக விசாரணை ஆனையத்தின் முன் தோற்றும்படித் தனக்கு இன்னமும் ஆணை அனுப்பப்படவில்லை என அது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார்.

மூலம்: ரைம்ஸ் ஒஃப் இண்டியா

Print Friendly, PDF & Email
Related:  கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் - த.நாடு அரசு

Leave a Reply

>/center>