ஈழத்து இளம் ஓவியர் பிருந்தாஜினியின் ஓவியங்கள் கொல்கத்தா காட்சியகத்தில்!

Spread the love

பெப்ரவரி 12, 2020

பிருந்தாஜினி பிரபாகரன்

பிருந்தாஜினி பிரபாகரன் வளர்ந்துவரும் ஈழத்து ஒவியக் கலைஞர். ஓவியக் கலையில் இளமானிப் பட்டத்தைப் பெற்ற இவர் ஒராண்டு காலம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைப் பிரிவில் தற்காலிக விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

பிருந்தா என்ற தூரிகையால் வரையப்பட்ட, போருக்கு முன்னானதும் பின்னானதுமான ஒரு சமூகம் சுமந்துகொண்டிருக்கும், மண் மீதும் மக்கள் மீதும் கொண்டிருக்கும் அளவிலாக் காதலையும், சோகம், அவலம், துயரம் தாங்கிய நினைவுகளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் ஒவியங்கள் தனித்தன்மையானவை.

வடக்கிலும் கிழக்கிலும் ஓவியக்கூடங்கள் இவரது ஓவியங்களைத் தனியாகவும், இதர படைப்புகளுடந் சேர்த்தும் காட்சிப்படுத்தியுள்ளன. பிருந்தாஜினியின் ஒவியங்களின் ஈர்ப்பு கடல் கடந்து உள்ளங்களைப் பிரமிக்க வைக்கின்றமை குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.


சென்ற வருடம் மார்ச் மாதம் 8 முதல் 30 வரை புதுச்சேரி வாரிய ஒவியக்கூடத்தில் இவரது ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு (2020), பெப்ரவரி 25 முதல் 29 வரை கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் நான்காவது உலக ஓவியக் கண்காட்சியிலும் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன. கொல்கத்தாவில் நாஸ்ருல் த்ரிதா ஓவியக்கூடத்தில் இக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

– மாயமான்
Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>