ஈரானுக்கு எதிராக ட்றம்ப் நடவடிக்கை எடுக்க முடியாது - பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்! -

ஈரானுக்கு எதிராக ட்றம்ப் நடவடிக்கை எடுக்க முடியாது – பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

Spread the love

ஜனவரி 10, 2020

ஈரானுக்கு எதிராக ஜனாதிபதி ட்றம்ப் காங்கிரசின் அனுமதியின்றித் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எதையும் எடுக்கமடியாதென பிரதிநிதிகள் சபையில் நேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி

ஜனநாயகக்கட்சி பெரும்பான்மையாகவிருக்கும் பிரதிநிதிகள் சபையில் 224 – 194 என்ற எண்ணிக்கையில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இத் தீர்மானத்தை ஜனாதிபதி கடைப்பிடிக்க வேண்டுமென்ற (non-binding) கட்டாயம் எதுவுமில்லை.

காங்கிரசை ஆலோசிக்காமல், ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சொலைமாநியைப் படுகொலை செய்ய எடுத முடிவு தொடர்பாக ஜனாதிபதி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படும் இந்த வேளையில் அவரது நடவ்டிக்கைகளால் மேலும் பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக பிரதிநிதிகள் சபையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானம் எடுக்கப்பட்டபோது எட்டு ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் த்ற்மானத்துக்கு எதிராகவும், மூன்று குடியரசுக் கட்சி, ஒரு சுயாதீன உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தார்கள். செனட் சபையிலும் இது தொடர்பான விவாதம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசியலமைப்பின் ‘போர் அதிகாரங்கள் சட்டம் 1973’ இன் பிரகாரம் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் காங்கிரசுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் பகிரப்படுகிறது. காங்கிரஸ் போரப் பிரகடனம் செய்ய, ஜனாதிபதி, படைகளின் தளபதி என்ற கோதாவில் அமெரிக்காவைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இராணுவத்தை வழிநடத்தும் அதிகாரமுண்டு.

‘போர் அதிகாரங்கள் 1973’ சட்டத்தின்படி, பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் தீர்மானங்களை நிறைவேற்றிய பின்னர் தான் படைகளை மீள அழைக்கும்படி காங்கிரசினால் ஜனாதிபதியைப் பணிக்க முடியும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கனடா | சுருண்டு படுக்கும் கஞ்சா வியாபாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *