BREAKING NEWS | ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கும் முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் – நால்வர் காயம்!

Spread the love

ஜனவரி 12, 2020

ஈராக் விமானப்படைத் தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்கப் படையினர் தங்கியிருந்த பாக்தாத்துக்குத் தெற்கேயுள்ள ஈராக்கின் பலாட் விமானப்படை முகாம்கள் மீது சில நிமிடங்களுக்கு முன் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் நால்வர் காயப்பட்டுள்ளனர் எனவும் ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் அறிவிக்கிறது.

இப் படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்தன எனவும் அறியப்படுகிறது. குண்டுகள் அனைத்தும் விமானத் தளத்தின் ஓடுபாதையில் விழுந்தன எனவும் அச் செய்தி கூறுகிறது.

பலாட் விமானத் தளத்தில் எட்டுக் குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும் அதன் போது, இரண்டு அதிகாரிகள் உட்பட, நான்கு ஈராக்கிய இராணுவத்தினர் காயப்பட்டதாகவும் ஈராக் இராணுவம் அறிவித்திருக்கிறது.


Print Friendly, PDF & Email
Related:  வெளிநாட்டுப் பணியாளரை அவமானப்படுத்திய சவூதி அரம்கோ நிறுவனம்!

Leave a Reply

>/center>