World

ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

ஜனவரி 7, 2020

ஈராலில் அமெரிக்கவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

ஈராக்கிலுள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது சில மணித்தியாலங்களின் முன் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதென அமெரிக்க இராணுவக் கட்டளைத் தலைமையகமான பெண்டகன் ஒத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கப்படைகள் நிலைகொண்டிருக்கும் இத் தளங்களின் மீது ஈரான் 13 ஏவுகவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை கிடைத்த செய்திகளின்படி இத் தாக்குதல்களினால் எவரும் காயப்படவில்லை எனத் தெரியவருகிறது.

இத் தாக்குதல்களைத் தமது ‘புரட்சிக் காவலர்’ (ஈரானிய இராணுவம்) மேற்கொண்டதாகவும் தைவிட மோசமான தாக்குதல்களை எதிர்பார்க்கும்படியும் ஈரானிய அரச்சு சார்புத் தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது.

ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்துவருவதாகவும், அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுப்போமெனவும் பெண்டகன் பேச்சாளர் தெரிவித்தார்.

அதே வேளை, ஈரான் பதில் தாக்குதல் நடத்துமானால் அதன் கலாச்சார நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொள்ளுமென ஜனாதிபதி ட்றம்ப் தெரிவித்திருந்த கருத்துக்குப் பல எதிர்ப்புக்கள், அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் வந்திருந்ததையடுத்து அவர் அப்படியான கருத்துக்களை இன்று தெரிவிக்கவில்லை.