நவம்பர் 18, 2109
இளைப்பாறிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனெரல் கமால் குணரட்ண பாதுகாப்பு செயலாளாரகப் பதவியேற்கவுள்ளார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிப் போரின்போது 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய கமால் குணரட்ண கோதபாய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் மிகவும் மூர்க்கத்துடன் செயற்பட்ட பல தளபதிகளில் இவர் மிக முக்கியமானவர். இவர் எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ (‘ ROAD TO NANDIKKADAL’) என்ற நூல் பிகவும் பிரபலமானது. தேர்தலின் வெற்றிக்குப் பின்னாலிருந்து கடுமையாக உழைத்த பல முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவர்.

பல அமைச்சுகளின் செயலாளர்களை உடனே நியமிப்பதற்கு கோதபாய முடிவெடுத்துள்ளார். அதில் பாதுகாப்பு அமைச்சு மிக முக்கியமான ஒன்று எனவும் அதற்கு நம்பிக்கையான ஒருவர் கமல் குணரட்ண எனவும் நெருக்கமான வட்டாரங்களில் முன்பே பேசப்பட்டிருந்தது.
இறுதிப் போரின்போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் கமால் குணரட்ணவிற்குமிடையில் கருத்து வேறுபாடு இருந்ததும் கோதபாய சரத் பொன்சேகாவை நாட்டுக்கு வெளியே அனுப்பிவிட்டுத் தன் கட்டளைகளை நேரடியாக கமால் குணரட்ணவின் மூலமாக செயற்படுத்தியதாகவும் தகவல்கள் முன்பு வெளிவந்திருந்தன.