இலங்கை | 18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகரா
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கப்படவேண்டுமென்று இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விரைவில் முன்மொழியப்படவுள்ள இச் சட்ட வரைவின்படி, சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்கும் ஒழுக்கமுள்ள சமுதாயமொன்றை உருவாக்குவதற்காகவே இத் திட்டமெனவும், இதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2011 இல் பல்கலைக்கழக மாணவர்கள் கட்டாய தலைமைத்துவப் பயிற்சியை வழங்கும் திட்டத்தை அப்போதைய அரசு ஆரம்பித்திருந்தது. இப் பயிற்சிகளைப் பாதுகாப்பு அமைச்சே வழங்கியிருந்தது.
சீனா போன்ற நாடுகளில் இளைஞர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சி இருக்கிறது.