Sri Lanka

இலங்கை | 16 வது பாராளுமன்றத்தில் 28 அமைச்சுகள்; 40 ராஜாங்க அமைச்சுகள்


28 அமைச்சர்கள், 40 ராஜாங்க அமைச்சர்கள் கொண்ட மந்திரிசபை ஜனாதிபதியால் அறிவிப்பு

இலங்கையின் 16வது பாராளுமன்றத்தின் 28 பேர் கொண்ட அமைச்சரவையையும், 40 பேர் கொண்ட ராஜாங்க அமைச்சுகளையும் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியினாலும், பிரதமமந்திரியாலும் நிர்வகிக்கப்படும் அமைச்சுகளும் இம் மந்திரிசபையில் அடங்கும்.

பாதுகாப்பு, நிதி, புத்த சாசனம் மற்றும் மத, கலாச்சார விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடு, நீதி, வெளி விவகாரம், பொதுச் சேவைகள் மற்றும் மாகாணசபை உள்ளூராட்சி, கல்வி, சுகாதாரம், தொழில், மீன்பிடி, தோட்டம், நீர் வழங்கல், மின்சாரம், சக்தி, துறைமுகம் மற்றும் ஏற்றுமதி, போக்குவரத்து, பெருந்தெரு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, சுற்றுலா, வர்த்தகம், தொழிற்சாலை மற்றும் ஊடகம் ஆகிய அமைச்சுக்கள் அமைச்சரவையில் இடம்பெறும்.

அமைச்சரவையின் தேவைகளுக்கிணங்க அவற்றின் கடமைகளை விரிவுபடுத்தி அதற்கேற்றாற்போல் திட்டங்களைச் செயலாக்க, ராஜாங்க அமைச்சுகள் துணை புரியும்.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டுமானம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் அதீத கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.