இலங்கை | முப்படைகளையும் உஷார் நிலையில் இருக்குமாறு வர்த்தமானி அறிவிப்பு!

Spread the love

டிசம்பர் 22, 2019

இலங்கையின் முப்படைகளையும் உஷார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ச இன்று வர்த்தமானி மூலம் பணித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பாவித்து முப்படைகளையும் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இவ்வுத்தரவு நாட்டின் எந்தெந்த நிர்வாக மாவட்டங்களில் பிரயோகிக்கப்பட வேண்டுமென்பதையும் இரண்டாவது இணைப்பின் மூலம் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை யாவன:

  • கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், இம்மாவட்டங்களை அண்மிய கடற் பிரதேசங்கள், கண்டி, மாத்தளை, நுவரேலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகலை, அனுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை

இதே போன்றதொரு உத்தரவு என்றமாதமும் நடைமுறையிலிருந்து நேற்றுடன் அது காலாவதியாகியிருந்தது.

நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை எதுவும் இல்லாத் நிலையில் இதன் தேவை என்ன என்பது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திப் பெற்றுக்கொண்ட ஆட்சி பலாமாக இருக்கிறது என மக்களுக்குச் சொல்லும் செய்தியாகவும் இது பார்க்கப்படலாம்.

19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் ஜனாதிபதி தனக்குக்கீழ் வைத்திருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சு ஆரம்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் வருமென எதிர்பார்க்கப்பட்டாலும், ஜனாதிபதி தந்திரமாக அதை எவரிடமும் கொடுக்காமல் தனக்கு மிகவும் நம்பிக்கையுள்ள, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவிடம் அப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். பாதுகாப்பு அமைச்சு என்று ஒன்று இல்லாதபோது அதற்கொரு செயலளரை நியமிக்க அரசியலமைப்பு இடம்கொடுக்காவிடினும் அதைத் தட்டிக்கேட்பதற்குரிய இடமான பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது எதிர்க்கட்சிகளுக்குரிய சங்கடமான நிலைமையாகும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>